
TVK DMK: தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கை எதிரி திமுக தான் என்று அறிவித்ததிலிருந்தே தன்னுடைய பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு என அனைத்திலும் திமுகவை சரமாரியாக வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் கரூர் சம்பவம் நடந்து 1 மாதம் கழித்து திமுக அரசின் ஆட்சியை குறை கூறிய விஜய் தவெக சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் டெல்டாவில் நடந்த நெல் பயிர்களின் சேதம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் 6 கேள்விகளை முன் வைத்த விஜய், இது போன்ற நிகழ்வுகள் வருட வருடம் நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெரும் தமிழக வெற்றிக் கழகம் 28 பேர் கொண்ட நிர்வாக குழுவையும் அமைத்துள்ளது. இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தவெகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர், அருண்ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், செந்தில் பாலாஜி வழியில் அமைச்சர் கே.என் நேருவும் சிக்கப் போகிறார் என கூறி இருக்கிறார்.
அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் போது லஞ்சம் பெற்று, வேலை வாய்ப்பை வழங்குவது தகுதியுள்ளவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்குகிறது என்று கூறினார். மேலும், கே.என் நேரு குறித்து கூறிய அவர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களில் 150 பணியிடங்களுக்கு சுமார் 25 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கபட்டத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான ஊழல்களுக்கு முதல்வர் எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
