அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

Photo of author

By Sakthi

அஷ்டமி நவமியில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்!

Sakthi

அஷ்டமி தினத்தன்று மருத்துவம் தொடர்பான எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என்று சொல்லப்படுகிறது என்றால் இந்த தினத்தில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை செய்தால் தொடர்ச்சியாக மருத்துவமனையை செல்வதற்கான நிலை உண்டாகும். முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது. அதோடு பிரத்யங்கரா தேவி, துர்க்கை அல்லது வராகி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது.

நவமி தினத்தன்று நவமி திதி வரும் சமயத்தில் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி மேற்கொண்டால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லப்படுகிறது. அதோடு இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால் அனைத்து விதமான காரியங்களும் சுபமாக முடியும் என்று சொல்லப்படுகிறது.