ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல்! 2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் !

Photo of author

By Sakthi

ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியல்! 2வது இடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் !

Sakthi

Updated on:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இதில் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்தில் நீடித்துவருகிறார், ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் ஜேசன் ஹோல்டர் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பந்து வீச்சாளர்களின் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2வது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 4வது இடத்திலும் இருக்கிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அனைவருமே அனைத்துப்போட்டியிலும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.