15வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த தொடரில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் கோப்பையை கைப்பற்றுவார்கள்? என்று தற்போது எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் சந்தித்தனர். இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார், இவரை தொடர்ந்து டெவான் கான்வேவுடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார்
சீராக விளையாடி வந்த இந்த ஜோடி மிக விரைவில் பிரிந்தது அதாவது 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெவான் காண்வே ஆட்டமிழந்தார். மறுமுனையில் விக்கெட் சரிந்தாலும் இன்னொரு முனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை கதர வைத்துக்கொண்டிருந்தார்.
அவர் ட்ரெண்ட் போல்ட் வீசிய 6வது ஓவரில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்பிறகு கேப்டன் தோனி அவருடன் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். 19வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மிகவும் சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கடைசியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை சேர்த்தது, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இருந்தார்கள் அதன் பிறகு களம் புகுந்த அஸ்வின் மற்றும் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்கள்.
ஜெய்ஸ்வால் 59 ரன்களும் அஸ்வின் 40 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்கள். 6வது விக்கெட்டுக்கு ஒன்றிணைந்து அஷ்வின், ரியான் பராக், ஜோடி அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.
இதன் காரணமாக, ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் 150 ஒரு ரன்களை அடித்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.