ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!

Photo of author

By Sakthi

ஆஷஸ் கிரிக்கெட் தொடர் 2023! சதம் அடித்த ஜோ ரூட்! 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இங்கிலாந்து அணி!!

 

நேற்று தொடங்கிய ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர் ஜோ ரூட் சதம் அடித்தார். இதையடுத்து  இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. .

 

நேற்று தொடங்கிய ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

 

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் சதம் அடித்து 118 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தொடக்க வீரர் ஜேக் கிராவ்லி அரைசதம் அடித்து 61 ரன்களும் பேரிஸ்டோ 78 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் இரட்டை இலக்கத்தில் ரன்கள் அடித்து ஆட்டமிளக்க இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.

 

ஆஸ்திரேலிய அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசல்வுட் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமரூன் கிரீன், மற்றும் போலன்ட் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

 

393 ரன்கள் பின் தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 14 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 8 ரன்களும் உஸ்மான் க்வாஜா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.