ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023… 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு…
இந்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் விளையாடவிருக்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்பொழுது அறிவித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி 50 ஓவர்கள் கொண்ட ஆசியக்கோப்பை தொடர் தொடங்கவுள்ளது. இந்தியா உள்பட பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை என்று ஆறு அணிகள் பங்கேற்று விளையாடவுள்ளது.
இந்நிலையில் அனைத்து அணிகளும் ஆசியோ கோப்பையில் விளையாடும் வீரர்களின் விவரத்தை அறிவித்து வருகின்றது. இந்நிலையால் பிசிசிஐ ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 17 பேர் கொண்ட இந்திய அணியை தற்பொழுது அறிவித்துள்ளது.
இதற்கான தேர்வுக் குழு கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் அஜித் அக்ரகார், தேர்வுக் குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முதல் முறையாக தேர்வுக் குழு கூட்டத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களும் கலந்து கொண்டார். இதற்கு முன்.இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி கூட தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்றது கிடையாது. இந்நிலையில் இந்த தேர்வு குழு கூட்டத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்கள் முதல் முறையாக கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் ஆசியக்கோப்பையில் விளையாடும் 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி 17 பேர் கொண்ட இந்திய அணியில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல சஞ்சு சாம்சன் பெயர் அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆசியக் கோப்பையில் விளையாடும் 17 பேர் கொண்ட இந்திய அணி:
ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல், ஷர்தல் தக்கூர், சூரியக்குமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, அக்சர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா