திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் டி ஆர் பாலு தலைமையில் மாவட்டம்தோறும், ஒவ்வொரு ஊராக சென்று கருத்து கேட்டு வருகிறார்கள்.
திருப்பூரில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கேட்பு கூட்டத்தில், பேசிய ஒரு கட்சி நிர்வாகி தயவுசெய்து தேர்தல் அறிக்கையில் மதுக்கடைகளை மூடுவது குறித்து தெரிவிக்க வேண்டாம்.
சென்ற முறை நாம் தோற்றுப் போக அதுவும் ஒரு காரணம் என்று தெரிவித்திருக்கின்றார்.
அந்த சமயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் எழுந்து, நாம் ஆட்சிக்கு வராவிட்டால் பரவாயில்லை கட்டாயம் மதுக்கடைகளின் அடைப்பு பற்றி அறிக்கையில் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று குரல் கொடுத்து இருக்கின்றார். இதை கேட்ட டி ஆர் பாலு முகம் சட்டென மாறிப்போனது.
இதற்கு காரணம், திமுகவினர் பலர் மதுபான ஆலைகள் வைத்திருக்கிறார்கள் ஏன், டி ஆர் பாலு கூட சொந்தமாக ஒரு மது தயாரிப்பு தொழிற்சாலையை நடத்தி வருகிறார் என்பதால் தான் அவரது முகம் திடீரென்று மாறி இருக்கின்றது.