பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்!

Photo of author

By Hasini

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்!

Hasini

Assassination by BJP and government - Thirumavalavan!

பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை – திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகளுக்காக  பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்க பாதிரியார் ஆவார். இவரை கடந்த ஆண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது.

பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரை தொடர்புபடுத்தி அவரை சிறையில் அடைத்தது. இந்தநிலையில் பாதிரியார் லூர்துசாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. இதை கொரொனா மரணமாக கருத முடியாது, மாறாக பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலை என்றே கூற வேண்டும்.

பாஜக அரசின் இந்த சட்டம்சார் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இதை ஜனநாயக சக்திகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலை கண்டிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.