தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து முடிவு செய்வதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல், அல்லது மே, மாதங்களில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையம் தலைமை செயலாளர் சின்கா அடங்கிய குழு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை செய்தது இதனையடுத்து இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பாக பேசியிருக்கிறார்கள்.
அப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக குறுந்தகடு மற்றும் புத்தகம் போன்றவற்றை உண்மை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் அவர் தெரிவித்ததாவது, தமிழக தேர்தல் சமயத்தில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் எப்பொழுதுமே தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று இருக்கின்றது பதற்றமான வாக்குச்சாவடிகளில் எவை எவை என்று பட்டியலும் தயார் செய்யப்படுகின்றது. ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு விடும் என்று தெரிவித்திருக்கின்றார்.
நடப்பு சட்டசபையின் பதவி காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அநேக கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் விருப்பப்படி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டிலே முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுமா என்பது தொடர்பாக தற்சமயம் எதுவும் தெரிவித்து விட இயலாது. என விளக்கமளித்த உமேஷ் சின்கா தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செலவினம் மிக தீவிரமாக கண்காணிப்பு செய்யப்படும். வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது, பரிசுப்பொருள் கொடுப்பது, போன்ற விதிமீறல்களை கண்காணித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மூன்று வருடங்களாக ஒரே இடத்தில் பணி செய்பவர்கள் பணி இடமாற்றம் செய்யப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் நபர்களுக்கு மேலே இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வு தளம், கழிவறை, மருத்துவ வசதிகள், ஏற்படுத்திக் கொடுக்கப்படும். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க வசதியாக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்க வசதிகள் செய்து தரப்படும் விருப்பப்படும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், தபால் வாக்கு வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.