2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சட்டமன்ற பொதுத் தேர்தலும் வரும்! பிஜேபியை தொடர்ந்து அதிமுகவும் ஆருடம்!

Photo of author

By Sakthi

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த விவகாரம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இடையே மோதல் ஏற்பட காரணமாக இருந்தது. மேலும் அது தற்போது காவல்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று பல்வேறு கட்டங்களை சந்தித்து இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 23ஆம் தேதி நடந்த அதிமுகவின் பொது குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றத்தை தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் மூலமாக அவை தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

முதலில் இரண்டு சார்பாருக்கும் ஆதரவாக இருந்த தமிழ் மகன் உசேன், அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு சென்றார். தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் அவர், தமிழகத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக இருக்கின்ற 75 மாவட்டங்களில் இருக்கின்ற 75 தர்காக்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தர்காக்களில் சிறப்பு வழிபாடு செய்தவர் இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக மதுரை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவேடகம் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் நாட்டிலேயே இருக்கின்ற 10 மாநிலங்களில் உள்ள தர்காக்களிலும் சிறப்பு தொழுகைகள் ஈடுபட இருக்கின்றேன். சிறப்பு வழிபாடு என்ற தூ ஆ நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆரம்பித்திருக்கிறேன். இதுவரையில் 42 மாவட்டங்களை சுற்றுப்பயணம் செய்து வழிபாட்டை முடித்து 43 வது மாவட்டமாக தற்போது ஆரம்பித்து இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெங்களூரு சிறைச்சாலையில் இருக்கும் போது பெங்களூரு சிறைச்சாலைக்கு சென்று கடிதம் வழங்கிவிட்டு 126 தற்காக்களின் சிறப்பு வழிபாடு நடத்தியதின் பலனாக அம்மா விடுதலை அடைந்தார்கள்.

வருகின்ற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாண்புமிகு அம்மா அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி, உதயகுமார் ஏற்பாட்டில் நடைபெறும் 51 திருமணங்கள் இறைவன் அருளால் சிறப்பாக நடைபெற வேண்டும்.

தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலும் நடத்துவதற்கு இறைவன் அருள் புரிய வேண்டும். தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்க வேண்டும்.

தமிழகத்தின் தன்னிகரில்லாத முதலமைச்சராக மீண்டும் அவர் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற பொது தேர்தலும் வரும் என பாஜக அண்ணாமலை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்து வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி அணியும் பல மாதங்களாக அதையே தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.