21-7-2022- இன்றைய ராசி பலன்கள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு சிக்கல்கள் விலகி சிறப்புகள் அதிகரிக்கும் நாள், கெடுக்கள்தான்கள் உண்டான குழப்பங்கள் நீங்கும், உறவினர்களால் சரியான சமயத்தில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள், உத்தியோக முயற்சி வெற்றி பெறும்.

ரிஷபம்

இன்று தாங்கள் வாக்கு சாதுரியத்தால் வளம் காணும் நாள், அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும், தொழில் வளர்ச்சி மேலோங்கும். மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும். நூதன பொருட் சேர்க்கை உண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், சுறுசுறுப்பாக பணியாற்றுவீர்கள் பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகலாம், தொழிலில் லாபம் கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களது பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை கைக்கு சேரும், வீடு மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள் வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களின் தொடர் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள், விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். ஆரோக்கியம் காரணமாக ஒரு தொகையை செலவிட நேரலாம்.

கன்னி

இன்று தாங்கள் எதிலும் பொறுமை கடைபிடித்து பெருமை காண வேண்டியது அவசியம். மற்றவர்களுக்காக பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நன்று, உடல்நலத்தில் அக்கறை தேவை வரவை விடவும் செலவு அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய திருமண முயற்சி கைகொடும் நாள், கடமையிலிருந்த தொய்வு நிலை அகலும், வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்

விருச்சிகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், முக்கிய புள்ளிகளின் சந்திப்பு கிடைக்கும், உடன்பிறப்புகள் உங்களுடைய குணமடைந்து நடந்து கொள்வார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் ஆதரவால் நன்மை கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும் நாள், எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பதவிகளும் தேடி வரலாம்.

மகரம்

இன்று தாங்கள் சான்றோர்கள் ஆலோசனைகளால் தடைகளை அகற்றிக் கொள்ள வேண்டிய நாள். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்று திட்டமிட்ட சில காரியங்கள் மாற்றம் செய்ய நேரலாம்.

கும்பம்

இன்று தாங்கள் உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள். கட்டிடப் பணியை மீண்டும் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனை உண்டாகும் நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நன்று.

மீனம்

இன்று தங்களுடைய திறமை பளிச்சிடும் நாள், தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்த சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.