இந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்!

0
105
  • மேஷம்

 

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவியிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதிநிலை தங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சற்றே சீரான நாளாக இருக்கும். ஆகவே எந்த செயலையும் நீங்கள் திட்டமிட்டு செய்ய வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது அவசியம். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது குடும்பத்திற்கு நல்லது. நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.

மிதுனம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. நீங்கள் பொறுமையுடன் இருந்தால் தான் தங்களுடைய காரியத்தில் வெற்றி பெற முடியும். அலுவலகத்தில் பணிகளை சரியாக செய்து முடித்தாலும் திருப்தி இருக்காது. கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். பணவரவு நெடுநிலமையுடன் இருக்கும். செலவுகள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும்.

கடகம்

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. நீங்கள் செய்யும் பணியில் சக பணியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு சற்று குறைவாக இருக்கும். குடும்பத்தில் சிறு, சிறு பிரச்சனைகள் தோன்றலாம். அதனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பண வரவு குறைவாக இருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவியிடம் சந்தோஷம் அதிகரிக்கும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். குறைந்த நேரத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதனால் நாளை தங்களுக்கு புதிய பணிகள் வழங்கப்படலாம். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மகிழ்ச்சிகரமான தருணங்கள் உண்டாகும். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது அலுவலகத்தில் திட்டமிட்டு சிறப்பாக செயல்பட வேண்டும் வாழ்க்கைத்தன இடம் பேசும்போது அனுசரித்து செல்வது நல்லது பணவரவு குறைவாக காணப்படும் வரவும், செலவும் கலந்து இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சற்றே சிரமமான நாளாக இருக்கும் நீங்கள் செய்யும் பணிகள் அனைத்திலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் தங்களுடன் வேலை பார்க்கும் சக பணியாளர்களிடம் இருந்து சிக்கல் வராமல் நடந்து கொள்வது அவசியம் கணவன் மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது முக்கியம் செலவுகள் சற்றே அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு மன நிம்மதி கிடைப்பதற்கு ஆலய வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நன்று. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியிடம் பாராட்டுக்களை பெறுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு பணி சுமை அதிகமாக இருப்பதால் கவலையடைவீர்கள். வாழ்க்கைத் துணையிடம் கடுமையாக நடந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. போதிய அளவு பணத்தை வைத்துக் கொள்வீர்கள். அதோடு அனாவசியமான செலவுகளால் நெருக்கடியை சந்திப்பீர்கள். நேர்மறை எண்ணம் தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கும்பம்

இன்று தாங்கள் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் தங்களுடைய செயல்களை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். தங்களுடைய சுமையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைக்க வேண்டும். ஆரோக்கியத்தில் முதுகு வலி மற்றும் சளி பிரச்சனை ஏற்படும்.

மீனம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். அலுவலகம் திருப்தியாக இருக்கும். ஆகவே பணியின் மீது ஆர்வம் அதிகரிக்கும். தங்கள் வாழ்க்கை துணையுடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.