நீங்க இந்த ராசியா? ஒரே ஜாலிதான் போங்க!

Photo of author

By Sakthi

மேஷம்

உத்தியோகத்திற்கான முயற்சி கைகூடும் நாள் எதிர்கால நலன் கருதி முக்கிய முடிவை மேற்கொள்ள வேண்டியிருக்கும் வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்தினைவதற்கான வாய்ப்பிருக்கிறது.

ரிஷபம்

தன்னம்பிக்கையும், தைரியமும், கூடும் நாள் மறக்க இயலாத சம்பவமொன்று நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு. செலவுகள் அதிகமாகும் என நினைத்த காரியமொன்று குறைந்த செலவில் முடியலாம், இடம்வாங்கும் வாய்ப்புண்டு.

மிதுனம்

உதிரியான வருமானங்கள் பெருகும் நாள், மனதில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள் தகராறு முடிவுக்கு வரும் மூத்தோர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.

கடகம்

புதிய திட்டங்களை போட்டு அதில் வெற்றி பெறும் நாள், வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும் குடும்பத்தினர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு வழங்குவார்கள். பயணத்தால் பலன் வந்து சேரும்.

சிம்மம்

உங்கள் நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலை வழங்குவார்கள் நாடு மாற்றம் மற்றும் வீடு மாற்றங்கள் தொடர்பாக சிந்திப்பீர்கள். மிக நீண்ட நாளாக இருந்த பிரச்சையொன்று பஞ்சாயத்துக்கள் மூலமாக முடிவுக்கு வரும்.

கன்னி

வாரிசுகளால் பெருமைபடும் நாள், எதிர்பாராத பணவரவு இல்லம் தேடி வருவதற்கான வாய்ப்புண்டு சொந்தங்களால் வந்த பகைமை மாறும் திருமணப் பேச்சுக்கள் நல்லதொரு முடிவை தேடித்தரும் எதிரிகள் விலகுவார்கள்.

துலாம்

இந்த நாள் உங்களுக்கு மிகவும் யோகமான நாளாக அமையும், செலவிற்கு ஏற்றவாறு வரவுமிருக்கும் அடுத்தவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு இதமாகயிருக்கும். பழைய பிரச்சனையொன்று மறுபடியும் தலை தூக்குவதற்கான வாய்ப்பிருக்கிறது. உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.

விருச்சிகம்

வாழ்க்கையில் புதிய பாதை தென்படும் நாள், பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும் மற்ற இனத்தை சார்ந்தவர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும். தொலைபேசி மூலமாக மகிழ்ச்சியான தகவல் வரும்.

தனுசு

உங்களுடைய பொது வாழ்வில் புகழ் கூடும் நாள் புதிய நண்பர்கள் கூட்டம் அறிமுகமாகலாம், வெளிநாட்டு பயணங்கள் போவதற்கான வாய்ப்பு கைகூடும். கடிதம் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும் உத்தியோகத்திற்க்கான முயற்சி கைகூடும்.

மகரம்

ஆடம்பரமான பொருட்களின் சேர்க்கை உண்டாகும், உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். பணிபுரியுமிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது.

கும்பம்

வழிபாட்டுத் தளங்கள் வழியே ஆனந்தம் காண வேண்டிய நாள், எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பிறகு செயல்படுத்துவது மிகவும் நன்று. குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் அதிகமாகலாம்.

மீனம்

நல்ல செய்தி இல்லம் தேடிவரும் தொழிலுக்கான முன்னேற்றத்திற்காக தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் வாய்ப்புண்டு அக்கம் பக்கத்து வீட்டாரின் பகை மாறுவதற்கான வாய்ப்புண்டு.