இன்று இந்த ராசிக்காரர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள்!

மேஷம்

இன்று தாங்கள் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியடையும் நாள். உத்தியோகத்தில் உயர்வுகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். முன்னேற்றத்துக்கு காரணமாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். வீடு மனை வாங்குவதற்காக வகுத்த திட்டம் கைக்கூடும்.

ரிஷபம்

இன்று தாங்கள் தைரியத்துடன் செயல்படும் நாள், வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை காரணமாக, பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடிவடையும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் கை கொடுத்து உதவி புரிவார்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு திடீர் திருப்புங்கள் உண்டாகும் நாள், திருமணம் முயற்சி வெற்றி பெறும். பயணத்தால் அலைச்சல் உண்டானாலும், ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடையும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு விருப்பங்கள் யாவும் நிறைவேறும் நாள், வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும், குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதற்கு முயற்சி செய்வீர்கள், தொழில் மாற்ற சிந்தனை ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பணவரவு பல வழிகளிலும் இருக்கும் நாள், இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு தட்ட காரியம் வெற்றி பெறும் நாள், தன்னம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும். பணம் தொடர்பான விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள், குடும்பத்தில் குதூகலம் கொடுக்கும் சம்பவமொன்று நடைபெறலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள், ஆனால் நண்பர்கள் மூலமாக பூர்த்தியடையும். பக்குவமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். விலகிச் சென்ற வரன் மீண்டும் வந்து சேரலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு கனவுகள் யாவும் நனவாகும் நாள் காரிய வெற்றி உண்டாகும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவதை பார்த்து ஆச்சரியப்படுவீர்கள். அடுத்தவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நன்று.

தனுசு

இன்று தங்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஆதாயம் கொடுக்கும் தகவல் வந்து சேரும் நாள். வரவு அதிகரிக்கும், பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும், தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

மகரம்

இன்று தாங்கள் வருமானத்திற்குரிய வழியை கண்டுகொள்ளும் நாள். தொழிலில் இருந்து வந்த மறைமுக போட்டிகள் நீங்கும். பொதுநலத்தில் ஆர்வம் உண்டாகும், மாற்று மருத்துவத்தால் உடல் நலம்பெறும்.

கும்பம்

இன்று தங்களுக்கு கனவுகள் யாவும் நலமாகும் நாள், தொட்ட காரியம் துலங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும், வாரிசுகளிடம் பக்குவமாக பேசுவது நல்லது, சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கங்கள் நீங்கும். திருமண பேச்சுக்கள் முடிவாகும்.

மீனம்

இன்று தாங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள், விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் சமயத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது நன்று மற்றவர்கள் மனதை புரிந்து கொண்டு செயல்படுவதால் பிரச்சினைகள் நீங்கும்.