மேஷம்
இன்று தங்களுக்கு ஆதாயம் அதிகரிக்கும் நாள், அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், எதிர்கால நலன் கருதி வகுத்த திட்டங்கள் வெற்றிபெறும், தொழில் ரீதியாக வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரலாம்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும். சுணக்கத்துடன் இருந்த காரியங்கள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெறும், பிரிந்து சென்றவர்கள் தற்போது பிரியமுடன் வந்திணைவார்கள்.
மிதுனம்
இன்று தங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் நீங்கும் நாள், அழகிய சிலருக்காக பணத்தை செலவிடும் சூழ்நிலை ஏற்படலாம். பயணங்கள் செல்வதை தவிர்ப்பது மிகவும் நன்று, தொழிலில் கூடுதல் விழிப்புணர்வு தேவைப்படும்.
கடகம்
இன்று தாங்கள் வழிபாட்டின் மூலமாக வளர்ச்சி காண வேண்டிய நாள், குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதில் செலவுகள் உண்டாகும், உத்தியோகத்தில் அதிகாரிகளால் தொந்தரவுகள் ஏற்படும்.
சிம்மம்
இன்று தங்களுக்கு காலை சமயத்திலேயே கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள், விட்டுப் போன உறவுகளும் மறுபடியும் வந்திணையலாம். திருமண பேச்சுக்கள் நல்லதொரு முடிவிற்கு வரும், ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.
கன்னி
இன்று தங்களுக்கு இனிமையான செய்தி இல்லம் தேடி வரும் நாள், வாரிசுகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது தொடர்பாக யோசிப்பீர்கள், வெளியுலாக தொடர்பு விரிவடையும்.
துலாம்
இன்று தாங்கள் சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை காண வேண்டிய நாள், பொல்லாதவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்வார்கள். துணிவும், தன்னம்பிக்கையும், குறையாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நன்று.
விருச்சிகம்
இன்று தாங்கள் கொள்கை பிடிப்போடு செயல்படும் நாள், பரிமாற்றம் ஒழுங்காகும், தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும், நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
தனுசு
இன்று தங்களுக்கு கடிதம் மூலமாக மகிழ்ச்சியான தகவலொன்று வந்து சேரும் நாள், அடுத்தவர்கள் கடுமையாக நினைக்கும் வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள், உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன் வருவார்கள்.
மகரம்
இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள், திருமண தடை நீங்கும், உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு, குடும்பத்தில் மூத்தவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்று.
கும்பம்
இன்று தங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும் நாள், தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை நீக்குவீர்கள். திருமண பேச்சுக்கள் முடிவாகலாம், குடும்பத்தினர்களுடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
மீனம்
இன்று தங்களுக்கு வெற்றி செய்தி வீடு வந்து சேரும் நாள், திறமை மிக்கவர்கள் ஒத்துழைப்பு காரணமாக, வகுத்த திட்டங்கள் நிறைவேறும் பாராட்டும், புகழும், அதிகரிக்கும், பணியாளர்கள் தொல்லை நீங்கும்.