நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று அதிகாலையிலேயே உங்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் அதிகரிக்கும் பொதுநல ஈடுபாடு அதிகமாகும் விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

ரிஷபம்

இன்று கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் முன்னேற்றத்திற்கு நண்பர்களுடைய உதவி கிடைக்கும் நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பயணங்கள் காரணமாக, பலன் அதிகரிக்கும்.

மிதுனம்

நட்பு வட்டாரம் என்பது விரிவடையும் நாள். தங்களுடைய நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

அருகாமையில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பாராத லாபம் இல்லம் தேடி வரும் குடும்பத்தினர்களின் குறைகள் தீர வழி யோசிப்பீர்கள் கொடுக்கல்-வாங்கலில் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட்டால் நிம்மதி அவசியம் கிடைக்கும். அடுத்தவர்களை விமர்சித்தால் பிரச்சனைகள் உண்டாகலாம் அலுவலகப் பணிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும் மருத்துவ செலவுகள் ஏற்படும்.

கன்னி

மகிழ்ச்சியான தகவல் இல்லம் தேடி வரும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டு மழையில் நனைவீர்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள். வாகன யோகமுண்டு.

துலாம்

பொது வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும் நாள். நல்ல நண்பர்களின் அறிமுகம் ஏற்படும் பொருளாதார நிலையை அதிகரிக்க புதிய திட்டங்களை நிறைவேற்றும் உறவினர்களிடையே உங்கள் புகழ் அதிகரிக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்கும் குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள் வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள் அருகில் இருப்பவர்களால் ஆதாயம் கிடைக்கும்.

தனுசு

வரன்கள் வாயில் தேடி வரும் நாள் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

உற்சாகத்துடன் பணிபுரிய வேண்டிய நாள். இடமாற்றம் இனிமையைக் கொடுக்கும் கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள் வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் பயணம் பலன் தரும்.

கும்பம்

எண்ணங்கள் யாவும் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள் அடுத்தவர்கள் நலன் கருதி எடுத்த முடிவு ஆதாயம் தரும் தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மீனம்

மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும் செலவுகளை சமாளிக்க நேற்றைய சேமிப்பு உதவிகரமாக இருக்கும்.