இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத் தொந்தரவு ஏற்படலாம்!

0
156

மேஷம்

இன்று தங்களுக்கு உறவினர்களால் நன்மைகள் நடைபெறும் நாள். நிதிநிலை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள், உத்தியோகத்திலும் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைக்கூடி வரும். பயணங்களில் மாற்றம் உண்டாகலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும், தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பெரிய பொறுப்புக்கள் தேடி வரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வ பலம் மிக்கவர்கள் தங்களுக்கு பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். எதிர்காலத்திற்காக சேமிக்க தொடங்குவீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழில் தொடர்பாக ஒப்பந்தங்கள் வந்து சேரலாம், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள், பயணம் எதிர்பார்த்த பலனை கொடுக்கும்.

சிம்மம்

இன்று தங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கலாம், நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ள மாட்டார்கள், உத்தியோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது மிகவும் நன்று.

கன்னி

இன்று தங்கள் கவனமுடன் செயல் படுவதன் மூலமாக காரிய வெற்றி உண்டாகும் நாள். திடீர் செலவுகளை சமாளிக்க மற்றவர்களிடம் கைமாற்று வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும், ஆரோக்கிய பாதிப்பு உண்டாகும்.

துலாம்

இன்று தங்களுக்கு தேவைகள் யாவும் பூர்த்தியாகும் நாள், நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள், குடும்ப பிரச்சனைகள் நல்லதொரு முடிவிற்கு வரும், தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள், தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும், அன்பான நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு தொலைபேசி மூலமாக பொன்னான தகவல் வந்து சேரும் நாள், பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும், வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் தோன்றலாம். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும்.

மகரம்

இன்று தாங்கள் எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். அதன பொருள்சேர்க்கையுண்டு, மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள், உத்தியோகத்தில் தங்களுடைய திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு செல்வ நிலை அதிகரிக்கும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி கைக்கூடும் . அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் மீண்டும் தொடரும், எண்ணம் மேலோங்கும்.

மீனம்

இன்று தாங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். உத்தியோகத்தில் இலாக்கா மாற்றங்கள் கூட வருவதற்கான வாய்ப்புண்டு, வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும், அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Previous articleமின்னணு கட்டண வசூலை எப்படி பெறுவது? அவ்வாறு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? என்பதை பார்க்கலாம் வாங்க!… 
Next articleசிவபெருமானை நோக்கி தவம் புரிந்த குரு பகவான்!