இந்த ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாள்!

0
142

மேஷம்

இன்று தங்களுக்கு நட்பால் நல்ல காரியங்கள் யாவும் நடைபெறும் நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்லதொரு முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், உத்தியோக உயர்வு தொடர்பாக தகவல் வரலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், பணவரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும், பயணத்தின் போது பிரபலமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும் நாள். உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். தேவையான பொருட்களை வாங்க சற்றே அலைச்சல்களை சந்திக்க நேரலாம், உத்தியோகத்தில் அனுசரித்து செல்வது நன்று.

கடகம்

இன்று எங்களுக்கு மகிழ்ச்சியான வாய்ப்புகளை சந்தித்து மகிழ்ச்சியடையும் நாள். உற்றார், உறவினர்களின் உதவி கிடைக்கும். உல்லாச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும், வியாபாரத்தில் சற்றே விழிப்புணர்வுடன் செயல்படுவது நன்று.

சிம்மம்

இன்று தங்களுக்கு நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பண தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும், வெளி உலகத் தொடர்புகள் விரிவடையும், விழாக்களில் பங்கேற்றுக் கொண்டு மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு.

கன்னி

இன்று தங்களுக்கு எதிர்பார்ப்புகள் யாவும் நடைபெறும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், கொள்கை பிடிப்புடன் செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

துலாம்

இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள், அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் உண்டான அச்சுறுத்தல்கள் நீங்கும், பொல்லாதவர்கள் தங்களை விட்டு விலகிச் செல்வார்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வருமானம் இரட்டிப்பாகும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள், செலவுகள் அதிகரிக்கு,ம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, வாகன பராமரிப்புக்காக ஒரு தொகையை செலவிட்டு மகிழ்ச்சியடைவீர்கள், தொழில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு.

மகரம்

இன்று தங்களுக்கு ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய நண்பர்கள் நந்தினார்கள் சுப நிகழ்வுகளில் பங்கேற்றுக் கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்திப்பீர்கள்.

கும்பம்

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டும் நாள், மற்றவர்கள் நலனில் எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும், பயணங்களில் ஆர்வம் அதிகரிக்கும், பாசமிக்கவர்கள் உங்கள் பணத்தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

மீனம்

இன்று தங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியிடுவீர்கள். வாரிசுகளின் வருங்கால நலனில் அதீத அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், திருமண கனவுகள் நினைவாகலாம்.

Previous articleதோல் சுருக்கம் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்கும் திராட்சை! முழு விவரங்கள் இதோ உங்களுக்காக!
Next articleஉங்களுக்கு ஒட்டுக்குடலா?அதில் வீக்கங்கள் இருக்கா?காரணங்கள் இதுதானா?..