இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கடன் தொல்லை அறவே அகலப் போகிறது!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று உங்களுக்கு நண்பர் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும் நாள். வீண் செலவுகள் குறையலாம் தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியடையும் தொல்லை கொடுத்த எதிரிகள் விலகிச்செல்வார்கள். பக்கத்து வீட்டாரின் பாச பழையில் நனைவீர்கள்.

ரிஷபம்

இன்று உங்களை புரிந்து கொள்ளாமல் பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையகூடிய நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள் வெளிநாட்டு தொடர்பு காரணமாக, திருமண கனவுகள் நனவாகும்.

மிதுனம்

இன்று உங்களுக்கிருந்த கடன் சுமை குறையும் நாள். கண்ட கனவு பலிதமாவதற்கான வாய்ப்புண்டு நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். பிள்ளைகளால் வருமானம் வரும் சொத்து தகராறுகள் நீங்கும்.

கடகம்

இன்று உங்கள் இல்லம் தேடி இனிமையான செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் காரணமாக, வந்த பிரச்சனை முடிவுக்கு வரும் தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெறுவீர்கள் புதிய திட்டம் தீட்டுவீர்கள்.

சிம்மம்

இன்று நீங்கள் கையில் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் வியாபார முன்னேற்றம் காரணமாக எடுத்த முயற்சி பலன் கொடுக்கும். எதிர்கால நலனில் அக்கறைக்காட்டும் விதமாக சேமிக்கத்தொடங்குவீர்கள் வீட்டை சீரமைக்கும் எண்ணம் தோன்றும்.

கன்னி

இன்று நீங்கள் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகள் அதிகமாகலாம் சொந்தங்களாலும், சொத்துக்களாலும், பிரச்சனை ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலமாக முன்னேற்றம் கிடைக்கும்

துலாம்

அதிகாலையிலேயே கலகலப்பும், மாலையில் சற்றே சலசலப்பும் உண்டாகுமானால் மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகமாககலாம் நண்பர்கள் ஆதரவு கொடுப்பதாக சொல்லி விட்டு திடீரென்று விலகிச்செல்வார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் காரணமாக, மகிழ்ச்சி அதிகரிக்கும் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் சொத்து சேர்க்கை தொடர்பான விதத்தில் நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

தனுசு

இன்று நீங்கள் இடமாற்றம் காரணமாக, இனிமை காண வேண்டிய நாள். செலவுகள் அதிகமாகும் தொழில் பார்ட்னர்களிடம் சில குழப்பங்கள் உண்டாகி நல்ல முடிவெடுப்பீர்கள் . புகழடைந்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.

மகரம்

இன்று நீங்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் இனிமையான தகவல் இல்லம் தேடி வரும் நாள். உத்தியோக உயர்வு தொடர்பாக செய்திகள் வருவதன் மூலமாக மகிழ்ச்சி வந்து சேரும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள், தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்கும்.

கும்பம்

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். வாழ்க்கை தரம் உயர்வதற்கான வழிவகை செய்து கொள்வீர்கள் கட்டிட பணி ஆரம்பமாகும். குடும்பத்தார்கள் உங்கள் வாக்கிற்கு மதிப்பு கொடுப்பார்கள் அரசியல்வாதிகளால் ஆதாயம் ஏற்படும்.

மீனம்

இன்று தங்களுடைய செல்வ வளம் அதிகரிக்கும் திடீர் பயணம் காரணமாக, நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் உயர் பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும் இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றியடையும்.