இந்த ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்துடன் பணிபுரியும் நாள்!

0
48

மேஷம்

இன்று தங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் தொல்லை கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள், தொலைபேசியில் ஆச்சரியமிக்க தகவல் வந்து சேரும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு நல்லவர்களின் தொடர்பால் நன்மை வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் ஏற்படும்
. உத்தியோக மாற்றம் தொடர்பாக சிந்தனை செய்வீர்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு தொந்தரவு கொடுக்கும் எதிரிகளின் பலம் அதிகரிக்கும் நாள். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கடன் சுமை அதிகரிக்கும், மற்றவர்களுக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது, மருத்துவச் செலவு ஏற்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு எதிர்பாராத வரவு வீடு தேடி வரும் நாள். வளர்ச்சி அதிகரிக்கும், குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்

இன்று தாங்கள் சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள் அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நினைப்பீர்கள். நடைபெறும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் விரிவடையும்.

கன்னி

இன்று தாங்கள் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும், செயல்படும் நாள். வருமானத்திலிருந்த தடைகள் நீங்கும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடரும். குடும்பத்தில் நிலவி வந்த சொல் யுத்தம் சுமுகமாக முடிவடையும்.

துலாம்

இன்று தங்களுக்கு பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீண்டும் தொடரும். வாரிசுகளால் செலவுகள் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்பை சற்று தளர்த்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உதவி செய்வதாக தெரிவித்தவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். முக்கிய பணிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக திகழ்வார்கள்.

தனுசு

இன்று தங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். வியாபாரத்திலிருந்த எதிர்ப்புகள் நீங்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.

மகரம்

இன்று தங்களுக்கு பெருமைமிக்க செய்தி வந்து சேரும் நாள். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பீர்கள். பொருளாதார பற்றாக்குறை நீங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் தொடர்பான தகவல் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு வரன்கள் வாயில் கதவை தட்டும் நாள். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடந்தேறும்.

மீனம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் செயல்படும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்கும்.