இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாளாக இருக்கும்!

0
259

மேஷம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். தாங்கள் எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். தங்களுடைய மனைவியுடன் நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் உண்டாகாது.

ரிஷபம்

இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கு சரியான நாள். தங்களுடைய லட்சியத்தை அடைவீர்கள். அலுவலகம் மனதுக்கு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகள் பக்கபலமாக இருப்பார்கள். தங்களுடைய மனைவியுடன் வெளிப்படையாக பேசி மகிழ்ச்சியாக இருப்பீர்கள் பண வரவு குறைவாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதால் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சினையும் உண்டாகாது.

மிதுனம்

இன்று தாங்கள் எதை செய்தாலும் கவனமுடன் இருப்பது அவசியம். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். தங்களுடைய மனைவியுடன் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் தொடை வலி பிரச்சனை உண்டாகும்.

கடகம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். ஆவே நீங்கள் செய்யும் பணியை திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். கவனமாகவும், பொறுமையுடனும் செயல்பட வேண்டியது அவசியம். வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது வார்த்தைகளை கவனமுடன் கையாள வேண்டும். பண வருட திருப்திகரமாக காணப்படாது. ஆரோக்கியத்தில் சளி மற்றும் இருமல் பிரச்சனை உண்டாகும்.

சிம்மம்

இன்று தாங்கள் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். வெற்றியடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான தருணங்களை பேசி மகிழ்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் உண்டாகாது.

கன்னி

இன்று தாங்கள் முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. வேலைகள் கஷ்டமாக இருந்தாலும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தாங்கள் மனைவியுடன் பேசும்போது கவனமுடன் இருப்பது அவசியம். பணவரவு திருப்திகரமாக இருக்கும் சேமிப்பை அதிகரிப்பீர்கள்.

துலாம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக காணப்படும். பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் தங்களுடைய செயலுக்கான பாராட்டுக்கள் கிடைக்கும். மனைவியுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக காணப்படும். பணத்தை பயனுள்ள விதத்தில் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனையும் உண்டாகாது.

விருச்சிகம்

இன்று தங்களது சவாலான நாளாக காணப்படும். ஆகவே இறைவனை வழிபடுவது அவசியம். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படுவதால் பதற்றம் அடைவீர்கள். தங்களுடைய துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். நிதி நிலைமை குறைவாக இருக்கும். ஆகவே கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு

இன்று தங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வெளியூர் பயணம் செல்வதால் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் தங்களுடைய செயலைக்க கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.

மகரம்

இன்று தாங்கள் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பணிகள் அதிகமாக காணப்படுவதால் கவலை அடைவீர்கள். வேலையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம். தங்களுடைய மனைவியுடன் பதட்டமான மனநிலையை வெளிப்படுத்துவீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். ஆகவே கவலை அடைவீர்கள். ஆரோக்கியத்தின் தலைவலி பிரச்சினை உண்டாகும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக இருப்பதால் தாங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புண்டு. அலுவலகத்தில் பணிகள் அதிகமாக காணப்படுவதால் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பது கடினமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் பணத்தை கவனமாக கையாள வேண்டும். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சினை உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு சவாலான நாளாக காணப்படும். மற்றவர்களிடம் அமைதியாக இருப்பதன் மூலமாக நன்மை பெறுவீர்கள். தாங்கள் எந்த செயலை செய்தாலும் துணிச்சலோடு செய்ய வேண்டும். அலுவலகத்தில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். வாழ்க்கை துணையுடன் அமைதியாக பேச வேண்டும். பண வரவு மற்றும் செலவு இரண்டுமே இருக்கும். அதோடு இன்று பதற்றமான நிலையை தவிர்க்க வேண்டும்.

Previous articleபண வரவு அதிகரிக்க வேண்டுமா?இந்தப் பொருட்களை அனைத்தும் உடனடியாக உங்கள் வீட்டில் இருந்து அகற்றுங்கள்!
Next articleநீங்கள் பூஜை அறையில் இந்த முறையில் சாமி படங்கள் வைத்திருக்கின்றீர்களா? உடனடியாக அதனை மாற்றங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here