மேஷம்
இன்று தாங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும்.
ரிஷபம்
இன்று தங்களுக்கு இல்லம் தேடி இனிமையான செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூல பலன்கள் கிடைக்கும் தொழில் ரீதியான நவீன கருவி வாங்கும் முயற்சி வெற்றி அடையும்.
மிதுனம்
இன்று தங்களுக்கு வியாபாரம் ரீதியாக மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வேலையில் மிக கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழக்கூடிய சூழ்நிலை உண்டாகும். திடீர் பணவரவு கிடைத்து கடன்கள் முடிவுக்கு வரும்.
கடகம்
இன்று தங்களுக்கு பண வரவு சுமாராக காணப்பட்டாலும் தங்களுடைய தேவைகள் நிறைவேறும். வீட்டில் பெண்களால் வீண் செலவு உண்டாகலாம். உத்யவாஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை.
சிம்மம்
இன்று தங்களுடைய குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும் சகோதர சகோதரிகள் வழியில் அனுகூலம் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபமடைவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
கன்னி
இன்று தங்களுடைய குடும்பத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வாரிசுகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை வழங்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுப காரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் வேலை பளு குறையும்.
துலாம்
இன்று தங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுப காரிய முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலம் கிடைக்கும். வாரிசுகள் மூலமாக சுப செய்திகள் வரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
இன்று தங்களுடைய குடும்பத்தில் பொருளாதார ரீதியாக இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் அகலும். எதிர்பார்த்த உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் சிறு, சிறு மாறுதல்கள் செய்தால் லாபத்தை அடைய முடியும். உறவினர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.
தனுசு
இன்று தங்களுடைய குடும்பத்தில் உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்ச் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் தொடர்பான வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.
மகரம்
இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் அணுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
இன்று தாங்கள் வாரிசுகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களிடமிருந்த மனஸ்த்தபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூல பலன் கிடைக்கும்.
மீனம்
இன்று தங்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி வழங்கும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களின் உதவியாளர் பிரச்சினைகள் தீரும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.