இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்!

0
191

மேஷம்

இன்று தாங்கள் மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்களிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது மிகவும் நன்று.

ரிஷபம்

இன்று தங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் வரலாம். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகலாம். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நன்று. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை வழங்கும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

மிதுனம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் வீண் செலவு வரலாம் உத்தியோகத்தில் ஏற்படும் பணி சுமையை உடன் பணியாற்றுபவர்கள். பகிர்ந்து கொள்வார்கள். கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் ஆதரவு கிடைக்கும் கடன் சுமை குறையும்.

கடகம்

இன்று தங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் அனுமதிப்பை பெறுவீர்கள். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்களை வசூல் செய்வீர்கள். வியாபாரத்தில் பரிமாற்றம் லாபகரமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள் சுப காரியங்கள் கைகூடும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்து சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு உயரம்.

கன்னி

இன்று தங்களுடைய குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். லட்சுமி கடாட்சியமும் ஏற்படும். வாரிசுகள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை வழங்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்

இன்று தங்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவைப்படும். வியாபாரத்தில் பணம் தொடர்பான கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் செய்யும் சமூக சேவையின் மூலமாக தங்களுக்கு பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை வழங்கும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று தங்களுக்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் அதிக கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டானாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகக்கூடும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும். குடும்பத்தினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் மன நிம்மதியை வழங்கும்.

கும்பம்

இன்று தங்கள் வாரிசுகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை வழங்கும். சுபச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.

Previous articleஅடுத்த படத்தை இயக்க தமிழ் இயக்குனரை தேர்வு செய்த அமீர் கான்!
Next articleமூட்டு வலி இல்லாமல் எழுபதிலும் இருபதைப் போல் போல் நடக்கலாம்:! இதை தடவினாலே போதும்! 100% உண்மை!