இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு தாரளமாக இருக்கும்!

0
285

மேஷம்

இன்று தாங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடங்கும். முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது அனுகூலமான பலன் கிடைக்கும். வாரிசுகள் தங்களுடைய பொறுப்புரிந்து நடந்து கொள்வார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் செய்யும் செயல்களில் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கைக்கு வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கடகம்

இன்று தங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் வாரிசுகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்தினைவார்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பண வரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாக இன்றைய நாள் விளங்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். வாரிசுகள் தங்களுடைய பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப முயற்சிளில் இருந்த தடைகள் நீங்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய உள்ளம் மகிழும் இனிமையான செய்திகள் கிடைக்கும். வாரிசுகளால் பெருமை அதிகரிக்கும். உறவினர்கள் உதவியுடன் சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகவும். சிலருக்கு ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு

இன்றைய தினம் தங்களுக்கு வாரிசுகளால் வீண் செலவு உண்டாகும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி காண்பீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும்.

மகரம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் உறவினர்கள் தங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக வகுத்த திட்டங்கள் நிறைவேறும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு உடன் பிறந்தவர்கள் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். வாரிசுகள் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு பண வரவு மிகுதியாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

Previous articleசிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்… வெளியான சென்ஸார் தகவல்!
Next article7 நாள் போதும்… சர்க்கரை நோய் இனி ஆயுளுக்கும் நெருங்காது!!