இந்த ராசிக்காரர்கள் இன்று பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம்!

0
156

மேஷம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். எளிதில் எல்லாவற்றையும் செய்து முடிப்பீர்கள். அதிக ஆற்றலுடன் செயல்படுவீர்கள் என்று தங்களுக்கு வெற்றி நிச்சயம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு சற்றே பதற்றம் காணப்படும். இசையை கேட்பதன் மூலமாக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை காண்பதன் மூலமாக மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

மிதுனம்

இன்றைய நாள் தங்களுக்கு சிறப்பாக இருக்காது. முக்கிய முடிவுகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். பணியில் சவால்கள் நிறைந்திருக்கும். அதிகரிக்கும் வேலைகள் காரணமாக பணியில் தவறுகள் நடைபெறலாம். பணிகளை சிறந்த முறையில் திட்டமிட வேண்டும்.

கடகம்

இன்று தங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக காணப்படும். சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பாக சிந்திப்பீர்கள். வீட்டு பிரச்சனைகளை சமாளிப்பது தொடர்பாக கவலை அதிகரிக்கும். பாதுகாப்பின்மை உணர்வை தவிர்த்து விடுங்கள். பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலமாக ஆறுதல் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள் தங்களை உற்சாகமாக வைத்திருக்கும். தங்களுடைய விருப்பங்கள் யாவும் நிறைவேறும். இன்று முக்கியமான முடிவுகளை மேற்கொள்ளலாம். நீங்கள் தங்களுடைய பலவீனங்களை. தள்ளி வைத்துவிட்டு பலத்துடன் பணியாற்றுவீர்கள். பணியில் தங்களுடைய நேர்மை உங்களுடைய மேல் அதிகாரிகளுக்கு திருப்தியை வழங்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு கடின உழைப்பின் மூலமாக நாளை சிறப்பாக்கி கொள்வீர்கள். இன்று சிறந்த முறையில் இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக தங்களுடைய திறமையை நிரூபிக்கலாம்.

துலாம்

இன்று தங்களுடைய அறிவை பயன்படுத்தி பல திட்டங்களை வகுப்பீர்கள் சில நேரங்களில் நீங்கள் பொறுமையை இழக்க நேரலாம். ஆகவே அமைதியாக இருப்பது சிறந்தது.

விருச்சிகம்

இன்று தங்களுடைய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி வரும். இன்றைய நாள் தங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் விரும்பியதை அடையலாம்.

தனுசு

இன்று தாங்கள் முறையான திட்டமிட்ட அணுகுமுறை மூலமாக இன்றைய நாளை அற்புதமான நாளாக மாற்றலாம். உங்களுடைய தொடர்பாடல் திறனை மேம்படுத்தினால் பல சிறப்புகளை பெறலாம். நீங்கள் புத்திசாலித்தனத்தை நன்றாக பயன்படுத்த வேண்டும்.

மகரம்

இன்று தங்களுக்கு பயனுள்ள நாளாக அமையும். நீங்கள் நேர்மையான முறையில் செயல்பட்டால் இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.

கும்பம்

இன்று தங்களுடைய செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் தெளிவான மனநிலையை சார்ந்து இருப்பீர்கள். இது தங்களுடைய பேச்சின் மூலமாக வெளிப்படும். பணிகளைப் பொறுத்தவரையில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இன்று வேலைகள் அதிகமாக இருக்கும். திட்டமிட்டு பணியாற்றுவது அவசியம்.

மீனம்

இன்று தங்களுடைய அணுகுமுறையில் பொறுமையும், உறுதியும் இருப்பது அவசியம். தங்களுடைய செயல்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டியது மிகவும் அவசியம். இன்று சில சௌகரியங்களை இழக்க நேரலாம். பணியிடத்தில் தங்களுடைய திறமைகளை காட்டுவீர்கள். அதன் மூலமாக நற்பெயரை பெறுவீர்கள்.

Previous article“என்னால் அழுதுகொண்டே இருக்க முடியாது…” மனம் திறந்த லைகர் பட இயக்குனர்  
Next articleஒரு சொட்டு எண்ணெய் போதும் உடலின் ஒட்டு மொத்த நோய்க்கும் தீர்வு:! தொப்புள் வைத்தியம்!