இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொட்ட காரியம் துலங்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று உங்களுடைய மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும் கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

ரிஷபம்

பண பரிமாற்றத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் நல்லதொரு முடிவுக்கு வரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் பாராட்டும் விதத்திலான காரியம் ஒன்றை செய்வீர்கள், சகோதர வகையில் எதிர்பார்த்த தகவல் தொலைபேசி மூலமாக வரலாம்.

மிதுனம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் மூலமாக ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கொடுக்கும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் மிக எளிதில் பூர்த்தியாகும் மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் நீங்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். உடல் ஆரோக்கியம் சீராகும் வழக்கமாக செய்யும் ஒரு சில பணியை இன்று மாற்றி அமைப்பதற்கான எண்ணம் தோன்றும்.கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய வருமானம் அதிகரிக்கும் நாள் ஆனாலும் சேவைகள் அதிகமாகும் தொழிலில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் எண்ணம் ஏற்படும் பயணத்தால் அனுகூலமான காரியம் நடைபெறும் உடல்நலத்தில் அக்கறை தேவைப்படுகின்றது.

கன்னி

நூதனமான பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். தூர பயணங்கள் செல்ல நினைத்த திட்டம் நிறைவேறும் பணப்புழக்கம் அதிகரித்தாலும் அடுத்தடுத்து செலவுகள் உள்ளிட்டவைகளால் திணறிப்போவீர்கள்.

துலாம்

இன்று தாங்கள் வளர்ச்சி பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில்ரீதியாக செய்த புது முயற்சி வெற்றி கொடுக்கும் இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம் விரோதங்கள் அகலும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டுத்தொழிலில் பணிபுரிவார் பங்குதாரர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடலாம். உத்தியோகத்தில் மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்புண்டு.

தனுசு

இன்று நீங்கள் ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். பணிகளை உடனடியாக முடிக்க முடியாமல் போவதற்கான வாய்ப்பிருக்கிறது. அதனால் சற்றே திணறுவீர்கள் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைப்பது மிகவும் கடினம் தொழிலிலிருந்த தேக்க நிலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு.

மகரம்

இன்று தங்களுடைய மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும் அதற்கான அறிகுறிகள் தோன்றலாம். மகிழ்ச்சியான தகவல் காலை சமயத்திலேயே வந்து சேரலாம், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

கும்பம்

இன்று தங்கள் முயற்சிகள் கைகூடும் தடைகள் அகலும் நாள். பழைய கடன்களை வசூலிக்க நீங்கள் எடுத்த முயற்சி வெற்றியை தேடித்தரும் பகலிரவாக பட்ட கஷ்டத்திற்கு ஏற்ற பலன் கிடைக்கும், மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மீனம்

இன்று உங்கள் அருகிலேயே இருந்த பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.