இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வங்கி சேமிப்பு அதிகரிக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தாங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். வாரிசுகளுடன் இருந்த மன தாபங்கள் நீங்கும் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் தொடர்பான புதிய திட்டங்கள் வெற்றியை வழங்கும். பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும் இதுவரையில் வராதகடன்கள் இன்று வசூல் ஆகும்.

கடகம்

இன்று தாங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலமாக சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை வழங்கும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறும் சூழ்நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு சுப செலவுகள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாரிசுகளின் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும்.

கன்னி

இன்று தங்களுக்கு சுப செய்திகள் கிடைத்து மனமகழ்ச்சி அதிகரிக்கும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் புதிய முயற்சிகள் எல்லாவற்றிலும் அனுகூலமான பலன் கிடைக்கும்.

துலாம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய திறமைகள் மேலதிகார்களால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த மாற்றுக் கருத்துக்கள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு

இன்று தாங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலே அதிகரித்தாலும் அதற்கேற்ற நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.

மகரம்

இன்று தங்களுக்கு பணவரவு தாராளமாக காணப்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி வழங்கும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தொழில் தொடர்பாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். புதிய பொருட்கள் வாங்க அனுகுலமான நாளாகும். வாரிசுகளின் தேவைகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

கும்பம்

இன்று தாங்கள் உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சிகள் வெற்றியை வழங்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வாரிசுகள் பெருமைப்படும் படி நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி, பொறாமைகள் குறையும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.