இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும்!

0
201

மேஷம்

இன்று தங்களுக்கு வளமான நாளாக இருக்கும். இன்று தங்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முக்கிய இலக்குகளை அடைவீர்கள். தங்களிடம் இன்று மனநிறைவு காணப்படும். அலுவலகத்தில் தங்களுடைய திறமைகளை நிரூபிப்பீர்கள். தங்களுடைய செயல் திறன் மூலமாக உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமை வெளிப்படும்.

ரிஷபம்

இன்று தாங்கள் எதிர்மறையான விளைவுகளை தவிர்க்க அறிவார்ந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும். அமைதியின்மையை சமாளிக்க வேண்டும். தங்கள் அணுகு முறையில் பொறுமை அவசியம். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது தவறுகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய மேலதிகார்களுடன் சில விரும்பத்தகாத சூழ்நிலையை சந்திக்க நேரலாம்.

மிதுனம்

இன்று தாங்கள் ஆன்மீக வழிபாட்டின் மூலமாக உயர்நிலையை அடைவீர்கள். ஆறுதல் பெறுவீர்கள். அது தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அலுவலகத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளதால் கவனமாக பணிபுரிய வேண்டும். தவறுகள் செய்து அதன் பிறகு அதை சரி செய்வதை விட முதலிலேயே தவறுகள் நேராக வண்ணம் பார்த்துக் கொள்வது நன்று.

கடகம்

இன்று தங்களுக்கு நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழ்நிலை காணப்படும். தங்களுடைய இலக்குகளை அடைவதற்கான தைரியமும், உறுதியும் தங்களிடம் காணப்படும். மொத்தத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தங்களிடம் நம்பிக்கை நிறைந்திருக்கும்.

சிம்மம்

இன்று தாங்கள் நம்பிக்கை உணர்வுடன் காணப்படுவீர்கள். ஆகவே எளிதாக வெற்றி பெறுவீர்கள். பயனுள்ள முடிவுகள் மூலமாக நல்ல பலன் கிடைக்கும். பணியில் வளர்ச்சி சிறப்பாக காணப்படும். நீங்கள் பணிகளை உற்சாகத்துடன் மற்றும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். இந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். கவனமுடன் பணியாற்றினால் பணியில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு நல்ல தரமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காண வேண்டும் என்ற விருப்பம் காரணமாக அதிகமான சிந்தனை ஏற்படும். அமைதியாக உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். இன்று பணிச்சுமை அதிகமாக காணப்படும். தங்களுடைய சக பணியாளர்களுடன் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நல்லுறவு கொள்ள வேண்டும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் உங்களுடைய பணிகளை எளிதாக செய்வீர்கள். தங்களிடம் அதிக ஆற்றலும் விழிப்புணர்வும் காணப்படும். தங்களுடைய வளர்ச்சியில் தங்களுக்கு மனநிறைவு உண்டாகும்.

தனுசு

இன்று தங்களுடைய இலக்குகளை அடைவதில் தாமதங்கள் ஏற்படும். பொறுமையுடன் அணுக வேண்டும். அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும். வழிபாடு மற்றும் மந்திரங்கள் உங்களுடைய மனதிற்கு ஆறுதல் வழங்கும். உங்கள் பணிகளை கையாள்வதை கடினமாக உணருவீர்கள். பணியிடத்தில் சக பணியாளர்களுடன் தவறான புரிந்துணர்வு காணப்படும்.

மகரம்

இன்று தங்களுக்கு பிடிப்பான நாளாக இருக்காது. எதிர்மறை விளைவுகளை தடுக்க தாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இன்று கவனமாக திட்டமிட்டு செயல்பட வேண்டும். இன்று தாங்கள் பணிகளை கையாள்வது கடினமாக உணருவீர்கள். பணிகளை மேற்கொள்ளும் போது தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே கவனமாக பணி புரிய வேண்டும்.

கும்பம்

இன்று தாங்கள் எந்த விஷயத்தை லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிப்படையாக இருக்க வேண்டும். அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். ஆகவே தங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் சில விரும்பத்தகாத சூழ்நிலையை நீங்கள் சந்திக்க நேரலாம். தங்களுடைய பணிகளை திறம்பட செய்ய சிறப்பாக திட்டமிட வேண்டும்.

மீனம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். திறம்பட செயல்படுவீர்கள். தங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் நற்செய்தி காத்திருக்கிறது. தங்களுடைய திறமைகளை நிரூபிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. தங்கள் திறமைகளை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள்.

Previous articleகுஜராத் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விபத்து! 60 பேர் பலியான சோக சம்பவம்
Next article10 நாளில் சுகர் 500 இருந்தாலும் நார்மல் ஆகி விடும்!