இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு குறையும்!

0
148

மேஷம்

இன்று தங்களுக்கு சுக செலவுகள் செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்றவாறு பதவி உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டு.

மிதுனம்

இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக அமையும் வேலையில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வாரிசுகள் வழியில் நல்லது நடக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். எதிலும் நிதானமாக இருப்பது மிகவும் நன்று. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு பொருளாதார சிறப்பாக காணப்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாரிசுகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பொன் பொருள் சேரும் நினைத்தது நடைபெறும்.

கன்னி

இன்று தங்களுக்கு தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

துலாம்

இன்று தாங்கள் ஆன்மீக மற்றும் தெய்வீக காரியங்களில் ஈடுபாடு மூலம் ஆனந்தம் அடைவீர்கள். வாரிசுகளுடன் சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

இன்று தாங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுபவர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும் குடும்பத்தில் இருப்பவர்களுடன் தொலைதூர பயணம் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளவு குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

தனுசு

இன்றைய தினம் தங்களுடைய உடல் நிலையில் சோர்வும், மந்தமும் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைவாக காணப்படும். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். வேலையில் உடன் பணியாற்றுபவர்கள். சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். சகோதர, சகோதரி வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும் நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்

இன்று தாங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் தொடர்பான விவகாரத்தில் வெளியூர் பயணம் செய்ய நேரலாம். அதனால் அனுகூலமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.

மீனம்

இன்று தங்களுக்கு நண்பர்களால் சில மன சங்கடங்கள் உண்டாக்கலாம் உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக அனுகூலமான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் வேலைப்பளு குறையும். வியாபார ரீதியாக பொருளாதார சிறப்பாக இருக்கும்.

Previous articleமழைக்கால நோய்கள் அனைத்திற்கும் ஒரே தீர்வு!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்!!
Next articleகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீராத சளி ஒரே இரவில் மலம்வழிய வரவேண்டுமா? இது ஒன்றே போதும்!!