இந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!

0
144

மேஷம்

இன்றைய தங்களுக்கு வரவை விடவும் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் மேல் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலமாக வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

ரிஷபம்

இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகள் வழியில் நல்லது நடக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு சுப செலவுகள் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள் வாரிசுகளின் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதிவு உயர்வு கிடைக்கும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலம் கிடைக்கும். வாரிசுகளுடன் இருந்த மனதாபங்கள் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். பொன் பொருள் சேரும் சுப காரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் உடன் பணியாற்றுபவர்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று லாபம் அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு வாரிசுகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்திலிருந்து பிரச்சனைகள் நீங்கி அமைதியான சூழ்நிலை உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் அனுகூலம் கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். அலுவலகத்தில் பனிச்சுமை குறையும். சகோதர, சகோதரி வழியில் அனுகூலமான பலன் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறைந்து காணப்படும். குடும்ப தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரலாம். வேலையில் உடன் பணியாற்றுபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மகிழ்ச்சியை வழங்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு பண வரவு சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் கிடைக்கும். வாரிசுகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் சுமை குறையும். பொன், பொருள் சேரும்.

மகரம்

இன்று தங்களுக்கு புது பொலிவும், தெம்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலமாக சுபச்செய்திகள் கிடைக்கப்பெற்று மனம் மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு புரிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து தொடர்பான வழக்குகள் தங்களுக்கு சாதகமாக முடியும்.

கும்பம்

இன்று தங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பரிசுகள் படிப்பில் நல்ல ஈடுபாடுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.

மீனம்

இன்று தங்களுக்கு எந்த செயலிலும் சுறுசுறுப்பு காணப்படும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். வியாபாரத்தில் இதுவரையில் வராத பழைய பாக்கிகள் வசூலாகும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

Previous articleகோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?
Next articleஇரண்டு பொருள் போதும்! அக்குளின் கருமை காணாமல் போயிரும்!