இந்த ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தாங்கள் கடினமான காரியத்தை கூட எளிதாக செய்து முடிக்கும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுப செய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். உற்றார், உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் தொடர்பான வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு திடீர் பணவரவுகள் கிடைக்கும். வாரிசுகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். அனைத்து காரியங்கள் தடையின்றி எளிதில் நிறைவேறும்.

மிதுனம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் ஏற்படும். வித்தியாசத்தில் உடன் பணியாற்றுபவர்களை அனுசரித்து சென்றால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று தங்களுடைய குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக காணப்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த கடமை கிடைக்கும். புதிய நபரின் அறிமுகம் உண்டாகும். தங்களுடைய திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நினைத்த காரியத்தையும் நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

கன்னி

இன்று தங்களுக்கு வேலை நிமித்தமாக உடல் சோர்வும், அலைச்சலும் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறைவதற்கான வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்ப்படும். உடன் பிறந்தவர்கள் ஓரளவிற்கு அனுகூலமாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய இல்லத்தில் தாராளமாக பணவரவு இருக்கும். லட்சுமி கடாட்சியமும் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும் தர்ம காரியங்கள் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் பரிமாற்றம் திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபங்கள் கிடைக்கும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு வியாபார ரீதியாக பொருளாதார நெருக்கடிகள் உண்டாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணியாற்றுபவர்களால் சில இடையூறுகள் ஏற்படலாம். இதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உற்றார், உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தெய்வீக வழிபாடு மன அமைதியை வழங்கும்.

மகரம்

இன்று தாங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். திருமண சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடிவடையும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.

கும்பம்

இன்று உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் கிடைக்கலாம். வாரிசுகளால் ஏற்பட்ட மன துன்பங்கள் குறையும். நண்பர்கள் மூலமாக உதவி கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள். கூட நண்பர்களாக செயல்படுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

மீனம்

இன்று தாங்கள் மனமகிழ்ச்சியுடன் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். சிலருக்கு பரிமாற்றத்தில் லாபம் கிடைக்கும். பணியாற்றுபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும். முயற்சிகள் வெற்றியை வழங்கும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.