இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்!

0
196

மேஷம்

கைப்பேசி மூலமாக வரும் தகவல் சிந்திக்க வைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். எதிர்கால நலன் கருதி புதிய திட்டங்களை வகுப்பினர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றங்கள் தொடர்பாக சிந்தனை தோன்றும் வீடு வாங்கும் வாய்ப்பு கைகூடும் உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மிதுனம்

இன்று உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் சரியாகும் குடும்பத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள் திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

கடகம்

பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள் வியாபார முன்னேற்றம் காரணமாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.உடல் நலம் சீராக சிறுதொகையை செலவிட நேரலாம்

கன்னி

இன்று உங்களுக்கு நண்பர்களால் நன்மைகள் உண்டாகும் நாள். விட்டுப்போன தொடர்புகள் மறுபடியும் வந்து சேரும் தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக ஒரு பயணத்தை மேற்கொள்ள நேரிடலாம்.

துலாம்

இன்று உங்களுக்கிருந்த பிரச்சனைகள் அனைத்தும் அகலும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும் சேமிப்பை அதிகரிப்பதுதொடர்பாக ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா என்ற சிந்தனையும் அதிகமாகும்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். பொது வாழ்க்கையில் புகழும் அதிகரிக்கும் வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும் தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றியை தேடி தரும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

தனுசு

இன்று உங்களுக்கு வரன்கள் வாயில் தேடி வரும் நாள். ஊக்கத்தோடு சுறுசுறுப்போடும் பணியாற்றுவீர்கள். இடம் வாங்குவதில் இருந்த தடை விலகும் உத்யோகத்தில் உங்கள் பதவி உயர்வு பரிசீலனையிலிருக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு மனக் குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது மிகவும் நன்று.நீங்கள் தெளிவாக இருந்தாலும் உங்களை சுற்றி இருப்பவர்கள் குழப்பிக் கொண்டிருப்பர் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும்.

கும்பம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் மூலமாக உதவி கிடைக்கும் நாள். பணப்பரிமாற்றம் ஒழுங்காகும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் உடல்நலம் சீராக இருக்கும் பொது வாழ்க்கையில் ஏற்பட்ட வீண் பழிகள் மறையும்.

மீனம்

இன்று உங்களுக்கு உதிரி வருமானங்கள் அதிகரிக்கும் நாள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும் புண்ணிய காரியத்தில் பொருளுதவி உள்ளிட்டவற்றை செய்வீர்கள் எதிர்பார்த்தபடியே உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.

Previous articleஉயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்!
Next articleசகல பாவங்களையும் போக்கும் திருப்பதி தீர்த்தங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here