28-11-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
265

மேஷம்

இன்றைய தங்களுடைய மனதில் ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். வெளியூர் செல்வதற்கு திட்டமிடுவீர்கள். பணியில் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில் சுமுகமாக இருக்கும் ஓய்வு கிடைக்கலாம். செலவும், வரவும் சமமாக இருக்கும். குடும்ப வாழ்வில் சச்சரவு வந்து நீங்கும். அமைதியாக இருக்க வேண்டும். நண்பர்களின் உதவி மனதிற்கு ஆறுதலாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடலில் எலும்பு தொடர்பான தொந்தரவுகள் உண்டாகலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு கையில் பணம் தங்காது. தொழில் வளர்ச்சி வழக்கம் போல இருக்கும். திட்டமிட்ட செயல்பாடு நடக்கும். விரயம் ஏற்படும். நிதி நிலையால் வீட்டில் கருத்து வேறுபாடு உண்டாகும். கணவன், மனைவி உறவில் அனுசரித்து செல்ல வேண்டும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மிதுனம்

இன்று தங்களுக்கு போராட்டமான நாளாக இருக்கும். வழக்கத்தை விட வேலை அதிகமாக காணப்படும். செய்த வேலையை மறுபடியும் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும். பணவரவு ஓரளவு நன்றாக காணப்படும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் தனிமையில் இருக்க விருப்பப்படுவீர்கள். கல்வியில் நிதானமாக இருக்க வேண்டும். சக மாணவர்களுடன் வாக்குவாதம் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

கடகம்

இன்று தங்களுக்கு அமைதியான நாளாக இருக்கும். வழக்கத்தை விட மிகவும் அமைதியை விரும்புவீர்கள். நேர்மையான நடத்தை வியாபாரத்தில் நல்ல பலன் வழங்கும் நிதிநிலை ஓரளவு நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வீட்டில் வெளிப்படையான அணுகுமுறை நெருக்கம் வழங்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கண் எரிச்சல் அல்லது உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகலாம்.

சிம்மம்

இன்று தங்களுடைய முயற்சிக்கு பதிப்பு கிடைக்கும். தொழிலில் அதிக வளர்ச்சி இருக்கும். முக்கிய பொறுப்பு தங்களை வந்து சேரலாம். கல்வியில் புகழ் கிடைக்கும். நிதி நிலையில் வழக்கத்தை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தினரிடம் அக்கரையாக நடந்து கொள்வீர்கள். பூர்வீக வழியில் இருந்த பிரச்சனை நீங்கலாம். காதல் வாழ்வில் அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் ஓரளவு நன்றாக இருக்கும். ஆனால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு பல விதத்தில் இருந்து உதவிகள் கிடைக்கலாம். அலுவலக வேலையில் அழுத்தம் குறையலாம். வியாபாரத்தில் நிரந்தரமான நிலை உண்டாகும். பணப்புழக்கம் சிறப்பாக காணப்படும். செல்வ நிலை நன்றாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் ஆதரவு அதிகரிக்கும். இல்லற வாழ்க்கை நல்வரவாக இருக்கும். காதல் வாழ்வில் முக்கியமான முடிவை மேற்கொள்ள வேண்டி வரலாம். உயர்கல்வி படிக்க உதவி கிடைக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய வேலையை செய்ய பலரின் ஆதரவு கிடைக்கலாம். மனதில் நினைத்த திட்டத்தை செய்து முடிப்பீர்கள். செலவு வழக்கம் போலவே இருக்கும். குடும்பத்தினர் மூலமாக பல ஆதாயம் கிடைக்கும். மனம் நிம்மதியாக இருக்கும். நண்பர்களிடம் சகஜமாக பழகுவீர்கள். எதிர்பாராத விருந்தினர் வருகை இருக்கலாம். மாலை சமயத்தில் பயணம் ஏற்படும். உடலில் தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு திருப்திகரமான நாளாக இருக்கும். தொழில் ஸ்தானம் சுமூகமாக காணப்படும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கலாம். கல்வி நிலையில் சந்தேகம் கேட்டு படிக்கும் ஆர்வம் ஏற்படும். செல்வ நிலையில் நிதானமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சகஜமாக இருப்பீர்கள். வெளிப்படையான பேச்சு காரணமாக புதிய திட்டம் வகுக்கப்படலாம். காதல் வாழ்வை திருமண பந்தமாக பேச்சுவார்த்தை நடைபெறலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

இன்று தங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும். மேலும் பல தினங்களாக நிலுவையில் இருந்த தொகை வீடு தேடி வரும். தொழிலில் நல்ல வழிகாட்டல் இருக்கும். நல்ல நிதிநிலை காணப்படும். வீட்டில் நிம்மதியான நிலை இருக்கும். வழக்கமான வேலையை ஆர்வமாக செய்வீர்கள். காதல் வாழ்வில் இருந்த விரிசல் கொஞ்சம், கொஞ்சமாக குறையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மகரம்

இன்று தங்களுக்கு லட்சியத்தின் மேல் பயம் வரலாம். கடுமையாக உழைக்க நேரலாம். தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். சக பணியாளர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கலாம். வரவும், செலவும் சமமாக இருக்கும். குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். வீட்டில் இருப்பவர்கள். மூலமாக நல்ல தகவல் வரலாம். மாணவர்களுக்கு திடீர் நட்பு கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது. வயிறு தொடர்பான தொந்தரவு ஏற்படலாம்.

கும்பம்

இன்று தங்களுக்கு புதுமையான நாளாக இருக்கும். பலரை சந்திப்பீர்கள். மனதில் இருக்கும் குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் சரியான நேரத்தில் வேலையை செய்ய முடியும். செல்வ நிலையில் செலவு குறையலாம். கையில் பணம் தங்கும். குடும்பத்தினருடன் வெளிப்படையாக இருப்பீர்கள். காதலர்களுக்கும் நல்ல புரிதல் ஏற்படலாம். தெளிவான மனநிலை உடல் நலத்தை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

மீனம்

இன்று தங்களுடைய ராசிக்கு துணிச்சலான நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியை கையாள நினைப்பீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டு படிக்கும் பக்குவம் காணப்படும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது. காதல் வாழ்வில் புரிதல் அதிகரிக்கும். இல்லற வாழ்க்கை நிம்மதியாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செரிமான கோளாறு உண்டாகலாம்.

Previous articleஉடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் பலன் தரும் செம்பருத்தி பூ! தினமும் இவ்வாறு சாப்பிட்டு வாருங்கள்!
Next articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!