நீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று உங்களுக்கு நிதானம் அவசியம்!

Photo of author

By Sakthi

மேஷம்

தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் பிரிந்து சென்ற நபர்கள் பிரியமுடன் வந்தினையும் நாள். குடும்ப வருமானத்தை அதிகரிக்க திட்டம் வகுப்பீர்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் ஆனால் கடினமான வேலைகளை கூட மிகவும் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். வீடு, இடம், வாங்கும் முயற்சி கைகூடும் நேற்றைய பிரச்சினை ஒன்று இன்றைய தினம் நல்லதொரு முடிவிற்கு வரும்.

மிதுனம்

இன்று தங்களுடைய மனக்குழப்பம் அகலும் நாள். வாரிசுகளால் பெருமை வந்து சேரும் தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும் கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் புது வழி கிடைக்கும் ஆரோக்கியம் சீராகும் பயணம் பலம் தரும்.

கடகம்

பொதுநல வாழ்க்கையில் ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள் சந்தித்த நண்பர்கள் இனிமையான செய்தியை தெரிவிப்பார்கள். அரசியல் களத்தில் குதிக்க ஆலோசனை செய்வீர்கள்.

சிம்மம்

இன்று உங்களுக்கு யோகமான நாள். வாரிசுகளின் திருமணம் கனவுகளை நனவாக்குவீர்கள் உத்தியோகத்திலிருப்பவர்கள் வீடு கட்ட மற்றும் வாகனம் வாங்குவதற்கு அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

கன்னி

இன்று உங்களுடைய குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். பண பரிமாற்றம் ஒழுங்காகவும் வாரிசுகளின் எதிர்காலம் தொடர்பாக முக்கிய முடிவை மேற்கொள்வீர்கள். இடம், பூமி, வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். இதுவரையில் பகையாக இருந்தவர்கள் தற்சமயம் உங்களுடன் நட்பு கொள்ள விரும்புவார்கள்.

துலாம்

இன்று தங்களுடன் மாற்றுக்கருத்திருப்பவர்கள் மனம் மாறும் நாள் உங்கள் வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் இளைய சகோதர வழியில் உதவி கிடைக்கும் அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல்கள் வரலாம்.

விருச்சிகம்

தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். நேற்று செய்ய மறந்த வேலை ஒன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வார்கள்.

தனுசு

காலையில் சமயத்திலேயே இனிமையான செய்தி வந்து சேரும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் யோகமிருக்கிறது அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு காரணமாக நல்ல காரியம் நடைபெறும்.

மகரம்

இன்று தங்கள் நம்பிக்கையை யாவும் நடைபெறும் நாள். சுப விரயம் ஏற்படும் வாக்குவாதம் செய்பவர்கள் தங்களுடைய மனதை மாற்றிக்கொள்வார்கள் திருமண முயற்சிகள் கைகூடும் உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம்.

கும்பம்

இன்று இயல்பான வாழ்வில் இன்பங்கள் அதிகரிக்கும் நாள். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஆர்வம் அதிகரிக்கும் வீடு மாற்றங்கள் நன்மையைக் கொடுக்கும் உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

மீனம்

இன்று எதிலும் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். செலவுகளை கட்டுப்படுத்த முடியாது ஆரோக்கியத்தொல்லை அதிகரிக்கலாம் கைமாற்றாக பெற்ற பணத்தை திருப்பிக் கேட்டு பலர் நிர்பந்தம் செய்வார்கள்.