நீங்கள் இந்த ராசியா? இன்று உங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று உங்களுக்கு பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும் உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் மிகவும் யோசித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்புண்டு அத்தியாவசிய செலவுகளை கருத்தில் வைத்து கைமாற்றாக வாங்கும் சூழ்நிலை ஏற்படும் மற்றவர்களுக்கு பொறுப்பு வழங்குவதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இன்று தங்களுக்கு பயணத்தல் பலன் கிடைக்கும் நாள். தொலைபேசி வழித் தகவல் கொடுக்கும் உயர் அதிகாரிகளை பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்

முன்னேறுவதற்கான சிந்தனை அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்து செய்வது நன்று குடும்பத்தார்கள் உங்களுடைய குணமறிந்து நடந்து கொள்வார்கள் உதாசீனப்படுத்தியவர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் வீட்டிற்கு தேவைப்படும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் எதிர் காலத்தை இனிமையாக வழி வகுத்துக் கொள்வீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள் குடும்பத்தில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும் வீடு வாங்கும் முயற்சி கைக்கூடுவதற்கான வாய்ப்புண்டு.

துலாம்

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் தகர்ந்து போகும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும் அலுவலக பணிகளில் ஏற்ப்பட்ட சிக்கல்கள் தீரும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு நற் சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு புகழை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு தொடர்பான இனிமையான தகவல் கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.

தனுசு

இன்று தங்களுடைய உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்று வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை நல்லதொரு முடிவுக்கு வரும் குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

மகரம்

இன்று தங்களுடைய ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் கைகொடுத்து உதவுவார்கள் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறுவதற்கான வாய்ப்புண்டு. உத்தியோகம் தொடர்பான முக்கிய முடிவை மேற்கொள்வீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு எடுத்த முயற்சி வெற்றியடையும் தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தம் வந்து சேரும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள்.

மீனம்

இன்று உங்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள் வரவு திருப்தி தரும் தொலைபேசி வழி தகவல் மகிழ்ச்சி கொடுக்கும் வீடு கட்டும் பணியை ஆரம்பிக்க நினைப்பீர்கள்.