நீங்கள் இந்த ராசியா? இன்று ஒரே குஷிதான் போங்க!

0
86

மேஷம்

இன்று தங்களுக்கு வாரிசுகளால் பெருமை சேரும் நாள். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதற்கு முன்வருவீர்கள், பயணம் காரணமாக, பலன் வந்து சேரும் உத்தியோகத்தில் ஏற்பட்ட மனக்குழப்பம் நீங்கும்.

ரிஷபம்

என்று தங்களுடைய முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் வேலைகள் மிக விரைவாக நடைபெறும், வியாபாரப் போட்டிகள் நீங்கும் உடன் பிறப்புகள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள், உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மனதில் தங்களுக்கென்று தனி இடம் கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். கைக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நன்று, சுபகாரியங்களில் பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும் வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு பயணங்கள் காரணமாக, பலன் கிடைக்கும் நாள். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும் ஆரோக்கியம் சீராக உணவில் கட்டுப்பாடு செலுத்துவது நன்று, ஆடை ஆபரண பொருட்கள் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

சிம்மம்

இன்று தாங்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள். செலவுகள் கூடுதலாக ஏற்படும், வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும், இட மாற்றம், வீடு மாற்றம், தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

கன்னி

வெளிநாட்டு முயற்சிகள் அனுகூலம் கிடைக்கும் நாள். கடமையில் கவனமாக இருப்பீர்கள் வகுத்த திட்டங்கள் நிறைவேறும் விலையுயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள்.

துலாம்

பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முடிவுக்கு வரும். கையிலெடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும், எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடையும் நாள். பொருளாதார உயர்வு ஏற்படுத்திக் கொள்வதற்கு முயற்சி செய்வீர்கள் தொலைபேசி மூலமாக வரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

தனுசு

இன்று தாங்கள் மகிழ்ச்சியான வாய்ப்புகளை சந்திக்கும் நாள். தொலைபேசி வழியில் இனிமையான தகவல் வந்து சேரலாம், திருமண கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தோன்றும், உத்தியாகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும்.

மகரம்

இன்று தாங்கள் நிதானமாக யோசித்து செயல்பட வேண்டிய நாள். முடிந்து விடும் என நினைத்த வேலை முடிவுக்கு வராமல் போவதற்கான வாய்ப்புண்டு தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நன்று.

கும்பம்

இன்று தங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அண்டை வீட்டாருடன் உண்டான பகை நீக்குவதற்கான வாய்ப்புண்டு.வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் .

மீனம்

இன்று தங்களுடைய புகழ் அதிகரிக்கும் நாள். புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும் அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள், தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள், உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வந்து சேரும்.