இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் மிகவும் முக்கியம்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு சகோதர ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் எதிர்பார்த்தபடி இருக்கும் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள், திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடந்தேறும்.

ரிஷபம்

இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நேசித்த நண்பர்கள் பகைவர்களாக மாறலாம். எந்தவிதமான ஆதாயமுமில்லாமல் அலைச்சல் ஏற்படும், மனச்சோர்வு உண்டாகலாம். அமைதிக்காக கோவில்களை நோக்கி செல்வீர்கள்.

மிதுனம்

வம்பு வழக்குகளைத் தீர்த்து வளம் காண வேண்டிய நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் ஏற்படும். அறிமுகமாகும் புதிய நட்பால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாகும்.

கடகம்

இன்று தங்களுக்கு இன்பங்கள் இல்லம் தேடி வரும் நாள். கற்றறிந்தவர்கள் பாராட்டுக்கள், கனிவு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். கடிதம் மூலமாக இனிமையான தகவல் வந்து சேரும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு இடமாற்ற சிந்தனை அதிகரிக்கும் நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களால் செலவுகள் ஏற்படும் உத்தியோகத்தில் உடன் பணியாற்றுபவர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று.

கன்னி

இன்று வாக்குவாதம் நீங்கி வளம் காணும் நாள். உள்ளே ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே ஒன்றை பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுடைய பணியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

துலாம்

இன்று தங்களுடைய வாழ்வில் வளமான எதிர்காலத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். தொலைபேசி மூலமாக வரும் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான தகவல் வரலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்தி தரும் விதமாக அமையும். பாராட்டும், புகழும், அதிகரிக்கும் வெளிநாட்டு அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தனுசு

இன்று கரைந்த சேமிப்புகளை தாங்கள் ஈடுகட்டும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். தந்தை வழி உறவில் உண்டான மனக்கசப்பு நீங்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் இணைவார்கள் கேட்ட இடத்திலிருந்து சலுகைகள் உடனடியாகக் கிடைக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள் தொழில் வளர்ச்சி உண்டாகும்.

கும்பம்

இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாகயிருக்கும் நாள். உறவினர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்துக்கொடுப்பார்கள். பயணத்தின் மூலமாக பலன் வந்து சேரும்.

மீனம்

இன்று தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறி நிம்மதி பெறும் நாள். வாரிசுகள் வழியில் சுபச் செலவுகளை சந்திக்க நேரலாம். தொழிலிலிருந்த மறைமுக போட்டி நீங்கும், எதிர்பாராத தொகை கைக்கு வந்து சேரும்.