நீங்கள் இந்த ராசிக்காரர்களா? உங்களுக்கு இன்று தொட்டதெல்லாம் துலங்கும் நாள்!

0
39

மேஷம்

இன்று தங்களுடைய நிதி நிலைமை அதிகரித்து நிம்மதி காணும் நாள். நீண்ட தினங்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு போதுமான அளவு கிடைக்கும்வாகன மாற்றம் செய்ய நினைப்பீர்கள்.

ரிஷபம்

அருகாமையிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். ஏமாற்றத்தை தவிர்ப்பதற்காக எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை திருமண வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். முன்னேற்றம் அதிகரிக்கும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கையுண்டு புதிய உத்தியோகத்தில் இணைய எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கடகம்

இன்று தங்களுடைய பேச்சாற்றலால் நற்பெயரெடுக்கும் நாள். தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைய வாய்ப்புண்டு. கோவில் வழிபாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, இடம், வாங்கும் எண்ணம் நிறைவேறலாம்.

சிம்மம்

இன்று தங்களுக்கு வசதிகள் அதிகரிக்கும் நாள். வரன்கள் இல்லம் தேடி வரும் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு மறையும், வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சேமிப்பில் வைத்திருந்தது சற்றே செலவாக வாய்ப்புண்டு.

கன்னி

இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் அதிகரிக்கும், திடீர் பயணங்கள் தித்திக்கும் அனுபவம் கிடைக்கும். அடுத்தவர்களை நம்பி முக்கிய முடிவுகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நன்று, செலவுகள் கொஞ்சம் கூடுதலாக ஏற்படலாம்.

துலாம்

தொலைபேசி மூலமாக வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணையாகயிருக்கும் நாள். எதிர்பாராத விதத்தில் உங்களுக்கு ஒருவர் உதவி செய்ய முன்வருவார். எடுத்த முயற்சில் எளிதில் வெற்றி கிடைக்கும் உத்தியோக உயர்வு ஏற்படும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு இனிமையான செய்தி இல்லம் தேடிவரும் நாள். வருமானம் திருப்திகரமாகயிருக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

தனுசு

தங்களை குறைகூறியவர்கள் இன்று பாராட்டும் நிலை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் உண்டான நெருக்கடி நிலை சரியாகும். இடைவிடாமல் செய்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைக்கும்.

மகரம்

எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும் நாள். கௌரவப் பதவிகள் உங்களைத் தேடி வரலாம், குழந்தைகளின் எதிர்கால நலனில் அதிக அக்கறை செலுத்துவீர்கள், வெளியுலகத் தொடர்புகள் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும் நாள். உறவு திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

மீனம்

இன்று தாங்கள் தொட்டது தொலங்கும் நாள். வருமானம் திருப்திகரமாகயிருக்கும், தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தேக ஆரோக்கியம் சீராகும் நேற்றைய வேலை ஒன்று இன்று தொடரலாம்.