இந்த ராசிக்காரர்களுக்கு இன்று வரன்கள் வீடு தேடி வரும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும் நாள். நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் வந்து சேரும் கல்வி முன்னேற்றம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு எடுத்த முயற்சி வெற்றி தரும் உத்தியோகத்தில் உங்களுடைய திறமை வெளிப்படும்.

ரிஷபம்

இன்று தங்கள் சாதுர்ய பேச்சால் நலம் காண வேண்டிய நாள். இடம், பூமி, விற்பனையால் லாபம் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள புதுவித வழியை கையாளுவீர்கள். உத்யோக உயர்வு மற்றும் சம்பள உயர்வு உண்டு.

மிதுனம்

இன்று தங்களுக்கு ஆகாயத்தை விடவும் செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்டுவது நல்லது, நிதானத்துடன் செயல்படுவதன் மூலமாக நிம்மதியடைவார்கள். திடீர் செலவுகளால் கையிருப்பில் உள்ளவை கரையும்.

கடகம்

இன்று தங்கள் எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள்.வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் உறவினர்களை காண பயணங்களை முன்னெடுப்பீர்கள் உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான தகவல் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு காலை சமயத்தில் கலகலப்பும், மாலை சமயத்தில் சலசலப்பும், ஏற்படும் நாள். உறவினர்கள் உதவி செய்வதாக தெரிவித்துவிட்டு கடைசி சமயத்தில் கையை விரித்து விடுவார்கள். வரவை விட செலவு அதிகரிக்கும்.

கன்னி

இன்று மங்கல ஓசை இல்லத்தில் கேட்க வழிபிறக்கும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்கமான நிலை சற்றே மாறும். ஒரே சமயத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை ஏற்படுத்தலாம்.

துலாம்

இன்று உங்களுடைய விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களைத் தேடி வரலாம். பயணங்கள் மூலமாக பலன் கிடைக்கும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதால் செலவுகள் அதிகரிக்கலாம்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வியக்கும் வியக்கும் விதமான செய்தி வீடு தேடி வரும் குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும் வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள் பொருளாதார நிலை அதிகரிக்கும்.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள் உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வரும் பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும்.

மகரம்

இன்று வாரிசுகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர் விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து பேசும் சூழ்நிலை ஏற்படும், வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

இன்று தங்களுக்கு பயணங்கள் மூலமாக பலன் கிடைக்கும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக நிற்பார்கள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும் தொழிலில் கூட்டாளிகள் விலகிச் சென்றாலும் புதியவர்கள் வந்திணைவர்.

மீனம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள். விட்டுப் போனவர்கள் மீண்டும் வரலாம். பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல தகவல்கள் நண்பர்கள் மூலமாக வந்து சேரும், விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.