நீங்கள் இந்த ராசியா? புதிய ஒப்பந்தங்கள் போட ரெடியா இருங்க!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு உறவினர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உன்னதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும் உத்தியோக உயர்வு ஏற்படும்.

ரிஷபம்

இன்று தங்கள் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதால் புதிய உத்தியோகத்தில் இணைய எடுத்த முயற்சி கைகூடும். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்திணையும் சொந்த பந்தங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மிதுனம்

உத்தியோகத்திலிருப்பவர்கள் பணியை மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும், தொழிலில் வருமானம் இருக்கும் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் நீங்குவதால் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கடன் தொல்லை வராது தூரத்து உறவினர்கள் திடீர் வருகை தருவதால் செலவு ஏற்படும்.

கடகம்

இன்று தங்களுக்கு காரியத்தடை ஏற்படுவதால் அலைச்சல் அதிகரிக்கும் நாள். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். குடும்ப செலவுகள் அதிகரிக்கும் தொழில் தொடர்பாக அலைச்சல்களை சந்திக்க நேரலாம் உத்தியோகப்பகை நீடிக்கும்.

சிம்மம்

இன்று தங்கள் சிக்கனத்தைக் கடைபிடித்து சிறப்படைய வேண்டிய நாள். உறவினர்களின் வருகையின் காரணமாக, உள்ளம் மகிழ்வீர்கள் தேக ஆரோக்கியம் சீராகும் வியாபார ரீதியிலான முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.

கன்னி

வீட்டில் இனிய சம்பவமொன்று நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முன்வருவீர்கள். வாரிசுகளால் பெருமைகள் வந்து சேரும் தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று தடை தாமதங்களை தவிர்க்க இயலாது. உத்தியோகத்திலிருப்பவர்கள் பொறுப்பிலுள்ள பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். தொழில் செய்பவர்கள் சரியான நேரத்தில் பணிகளை முடித்து பாராட்டு பெறுவீர்கள் குடும்பம் சீராக நடைபெற்று வரும்.

விருச்சகம்

இன்று தங்களுடைய காரியங்கள் யாவும் நிறைவேறும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயரதிகாரிகள் விருப்பப்படி முக்கிய வேலை ஒன்றை விரைவாக செய்வீர்கள். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும் குடும்பத்தில் சிறு, சிறு, பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்.

தனுசு

இன்று எடுத்த காரியங்களில் தீவிர முயற்சியின் காரணமாக, வெற்றியடையும் நாள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விருப்பப்படி இடமாற்றம் மற்றும் சம்பள உயர்வு உள்ளிட்டவற்றை பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரித்தாலும் செலவுகள் அதிகமாகலாம். குடும்பத்தில் உண்டாகும் சிறு, சிறு பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மகரம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் நாள். தள்ளி சென்ற ஒன்றை உடனடியாக செய்ய வேண்டிய நிலை ஏற்படும் தொழிலாளர்களின் அவசரம் கருதி முக்கிய வேலையை விரைவாக செய்து கொடுப்பீர்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சிய பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முயற்சி செய்வீர்கள் இடம் வாங்கும் எண்ணம் ஏற்படும் தொலைபேசி வழித் தகவலால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

மீனம்

இன்று தங்களுடைய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். வெளிநாட்டு தொடர்பு மூலம் லாபம் கிடைக்கும் தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.