இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஒரே கொண்டாட்டம்தான்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள் விலகிச் சென்றவர்கள் வந்திணையும் வாய்ப்பிருக்கிறது. சுணங்கிய காரியம் சுறுசுறுப்புடன் நடைபெறும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சியை மாற்றினத்தவர்கள் முடித்து வைப்பார்கள்.

மிதுனம்

இன்று தங்களுடைய எதிரிகள் நிர்மூலமாகும் நாள் எந்த ஒரு காரியத்தையும் உடனடியாக செய்து முடிப்பீர்கள். பணப் பரிமாற்றத்திலிருந்த சிக்கல் நீங்கும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு யோகமான நாள். விரயங்கள் அதிகரிக்கும், வேலைப்பளுவும், அதிகமாகும் வருமானம் வருவதற்கு முன்பாகவே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை.

சிம்மம்

இன்று தாங்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நபர் உங்களை தேடி வந்து பார்க்கலாம். ஒரு விதத்தில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு விதத்தில் செலவுகள் உண்டாகலாம்.

கன்னி

இன்று தங்களுக்கு பிரச்சனைகள் நீங்கும் நாள். வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும், பணியாற்றுபவர்கள் வாகன மாற்றம் செய்வது தொடர்பாக சிந்தனை அதிகரிக்கும். இதுவரையில் இருந்த பகை நட்பாக மாறும்.

துலாம்

இன்று தங்களுடைய தொழிலில் லாபம் கிடைக்கும் நாள். நாணய பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். நல்லவர்களின் தொடர்பு நீடித்திருக்கும் எதிர்பார்த்த உதவிகள் எளிதாக கிடைக்கும் விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.

விருச்சகம்

இன்று தங்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் நாள். வெளிவட்டார தொடர்புகள் சிறப்பாக இருக்கும் உயரதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கை கொடுப்பார்கள் திருமணக் கனவுகள் நனவாகும்.

தனுசு

இன்று தங்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும் தொழில் வளர்ச்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு.

மகரம்

இன்று தங்களுடைய இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வேலை பளு அதிகரிக்கும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரைய வாய்ப்புண்டு தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு காலை சமயத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்க்கையில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி ஏற்படும்.

மீனம்

இன்று தங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பிறருக்காக பொறுப்பேற்று வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும் வீடு ,இடம் வாங்க மற்றும் விற்பதற்காக எடுத்த முயற்சி வெற்றியடையும் உத்தியோகத்தில் இழந்துபோன பதவி மீண்டும் கிடைக்கலாம்.