இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள். சேமிப்பு எண்ணம் அதிகரிக்கும் நட்பால் நல்ல காரியம் நடக்கும். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புண்டு.

ரிஷபம்

இன்று நேரில் சந்திக்கும் நண்பர்களால் மகிழ்ச்சியடையும் நாள். ஏற்ற இறக்க நிலை மாற்றம் பெறும் எதிர்கால வளர்ச்சிகளை மனதில் கொண்டு திட்டங்களை வகுப்பீர்கள் சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் இருக்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்லும் நாள். நண்பர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும். பணப்பரிமாற்றம் ஒழுங்காகும், அரசியல்வாதிகளால் லாபம் கிடைக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். வழக்கமான பணிகளை மாற்றியமைத்துக் கொள்வீர்கள். வரவை எதிர்பார்த்து செய்த காரியம் ஒன்றில் திடீரென்று செலவுகள் ஏற்படலாம் தொழில் முன்னேற்றமடையும்.

சிம்மம்

இன்று தங்களுடைய வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கப்பெறும் வரவு எதிர்பார்த்தபடி இருந்தாலும் நிம்மதி குறைவதற்கான வாய்ப்புண்டு இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்று மாற்றி, மாற்றி, சிந்திப்பீர்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு யோகமான நாள். நண்பர்கள் மூலமாக நல்லதொரு தகவல் கிடைக்கும், உடல் நலன் கருதி ஒரு சிறிய தொகையை செலவிட வேர்கள் திருமணப் பேச்சுக்கள் முடிவாகலாம் பெற்றோர் வழி பிரச்சனை நீங்கும்.

துலாம்

இன்று தங்களுக்கிருந்த தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பார்கள் உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவார்கள்.

விருச்சிகம்

இன்று தாங்கள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயமிருக்காது. வழக்கமான பணிகளில் சுணக்கம் உண்டாவதற்கான வாய்ப்புண்டு, நூதனப் பொருள் வாங்குவதற்காக விரயமாவதற்கான வாய்ப்புண்டு.

தனுசு

இன்று தங்களுடைய விடாமுயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைக்கும் நாள். செலவுக்கேற்ற வரவு கிடைக்கும் விலகிச் சென்றவர்கள் விரும்பி வரும் வாய்ப்புண்டு பணப்பரிமாற்றம் ஆதாயம் கொடுக்கும்.

மகரம்

இன்று தங்களுடைய வாரிசுகளால் பெருமை வந்து சேரும் நாள். பூர்வீக சொத்து தகராறுகள் நீங்கி சான்றோர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியடைவீர்கள் நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வருவார்கள்.

கும்பம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்தி தரும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும் தொழில்ரீதியான அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும், குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது மிகவும் நன்று.

மீனம்

இன்று தங்களுடைய இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறுவதற்கான வாய்ப்புண்டு.வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும், வாரிசுகள் குடும்ப பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள் வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல்கள் வந்து சேரும்.