இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கையிலெடுத்து அனைத்திலும் வெற்றி தான்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய எதிரிகள் விலகிச் செல்லும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் தொடர்பான தகவல் வந்து சேரும், வாரிசுகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாவதற்கான வாய்ப்புண்டு, தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகி நின்ற வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் தோன்றலாம், நண்பர்கள் சரியான சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள் வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

மிதுனம்

இன்று தங்கள் முன்னேற்றம் கருதி முயற்சிகளை மேற்கொள்ளும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம், பஞ்சாயத்துக்கள் தங்களுக்கு சாதகமாக முடியும், வீடு வாங்கும் யோகமுண்டு பெற்றோர் வழியில் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர் நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கை கூடலாம், உங்களுடைய யோசனைகளைக் கேட்டு நடந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். வாரிசுகளின் கல்யாண முயற்சி கைகூடும்.

சிம்மம்

அரசியல்வாதிகள் காரணமாக, தங்களுக்கு அனுகூலம் கிடைக்கும் நாள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடக்கும், ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்புக் காரணமாக, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

கன்னி

இன்று தங்களுக்கு தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் நாள். கடின முயற்சிக்குப் பிறகு காரியங்களில் வெற்றி கிடைக்கும், பரிவர்த்தனை ஒழுங்காகும், நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வரலாம்.

துலாம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நாள். தொழில் முன்னேற்றம் ஏற்படும் தூரதேசத்திலிருந்து நல்லதொரு செய்தி வந்து சேரலாம், வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும், தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாகயிருக்கும்.

விருச்சகம்

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்திகரமாகயிருக்கும். வளர்ச்சிக்கு உறவினர்களும், நண்பர்களும், கைகொடுத்து உதவுவார்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை முன்னெடுப்பீர்கள்.

தனுசு

இன்று தங்களுடைய விருப்பங்கள் நிறைவேற வேண்டுமென்றால் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் பணியாட்கள் பிரச்சனைகள் உண்டாகும், ஆரோக்கியம் தொடர்பான விதத்தில் அச்சுறுத்தல் அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு தட்டுப்பாடுகள் நீங்கள் வேண்டுமென்றால் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த தொகை கைக்கு வந்தாலும் இரு மடங்காக செலவினங்கள் ஏற்படும், இல்லத்தில் இருப்பவர்கள் உங்கள் மீது குறை கூறுவார்கள்.

கும்பம்

இன்று தங்களுடைய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும் நாள். உதாசீனம் செய்பவர்கள் உங்களின் செயல்பாடுகளை பார்த்து மீண்டும் வந்திணைவார்கள் உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலைமை மாறும்.

மீனம்

இன்று தங்களுடைய வாரிசுகளின் வளர்ச்சியை பார்த்து பெருமைப்படும் நாள். கடனாக கொடுத்த தொகை மறுபடியும் வந்து சேரும். உறவினர்கள் மதிக்குமாறு நடந்துகொள்வீர்கள் பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவார்கள்.