மேஷம்
இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள். செல்வநிலை அதிகரிக்கும், தொழிலில் புதிய முன்னேற்றங்கள் உண்டாகும். தங்களுடைய முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
ரிஷபம்
முயற்சி செய்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஆனால் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள், குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் முழுமூச்சுடன் இறங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள்.
மிதுனம்
இன்று தாங்கள் திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். கடன் சுமை குறையும், உறவினர்களால் உண்டான உபத்திரவங்கள் நீங்கும். பயணங்களின்போது பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது மிகவும் நன்று.
கடகம்
இன்று தாங்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பச் சுமை அதிகரிக்கும், பரிமாற்றத்தில் விழிப்புணர்வு தேவை, அமைதி உண்டாகும். எதையும் சிந்தித்து செய்வது மிகவும் நன்று.
சிம்மம்
முன்னேற்றத்தை மனதில் வைத்து எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகிச் செல்வார்கள், பயணங்களால் நன்மை கிடைக்கும் விரோதிகள் விலகிச்செல்வார்கள்.
கன்னி
கொடுத்த பணம் சரியான நேரத்திற்கு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள், ஆலய வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் புதிய தொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
இன்று தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல்கள் வந்துசேரும், செலவுகளை குறைத்து சேமிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள், உத்தியோகம் தொடர்பாக எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்
விருச்சிகம்
இன்று தங்களுக்கு வரவு திருப்திகரமாக இருக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடந்தேறும். தொழில் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச்செல்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள்.
தனுசு
இன்று தங்களுக்கான வெற்றி தங்களின் வீடு தேடி வரும் நாள். பணம் உங்கள் கையில் நிறைந்திருக்கும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
மகரம்
இன்று தாங்கள் நம்பிக்கைகள் யாவும் நடைபெறும் நாள் நீண்ட நாளாக இருந்து வந்த நோய் இன்று தங்களை விட்டு அகலும். எதிரிகளின் தொந்தரவு குறையும், தொழில் தொடர்பாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள் வாரிசுகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
கும்பம்
இன்று தங்களுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும், தொழிலில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும், பயணத்தின் மூலமாக பிரபலங்களின் சந்திப்பு கிடைக்கும்.
மீனம்
இன்று தங்களுக்கு நண்பர்கள் மூலமாக நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் சற்று வளைந்து கொடுத்து செல்வது மிகவும் நன்று, பயணங்கள் பலன் தரும் விதமாக அமையும்.