இந்த ராசிக்காரர்களுக்கு இன்று திருமணம் கைகூடும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்றைய தங்களுக்கு அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் வந்து சேரும் நாள், உறவினர்களின் உதவி கிடைக்கும், நண்பர்களின் சந்திப்பு நன்மை தரும் விதமாக இருக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.

ரிஷபம்

இன்று தங்களது தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் நாள், தொல்லை கொடுத்தவர்கள் விலகிச்செல்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் தொடர்பான பிரச்சனைகளுக்காக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரலாம்.

மிதுனம்

இன்று உங்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும் நாள், அவசரத்தை தவிர்ப்பது மிகவும் நன்று. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பதற்கான வாய்ப்புண்டு பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும், வரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள், கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்றுவதற்கு முயற்சி செய்வீர்கள், மூத்தவர்களின் ஆலோசனை பலன் கொடுக்கும், திருமணக் கனவுகள் நனவாகும்.

சிம்மம்

இடமாற்றம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும் நாள்,பணத்தால் வந்த சிக்கல் நீங்கும், தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்கள் உதவி புரிவார்கள், புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

கன்னி

இன்று தங்களுடைய மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள், மறதியால் சில பணிகளை செய்யாமல் கெட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாது, வெளியூரிலிருந்து விமர்சனங்கள் வந்து சேரலாம் சேமிப்பில் சற்று கரையலாம்.

துலாம்

இன்று தங்களுடைய நிதி நிலைமை அதிகரிக்கும் நாள், பெற்றோர் வழியில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், காசோலை தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள், வி ஐ பிக்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும், தொழில் முன்னேற்றம் ஏற்படும் பயணங்களால் பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும் நாள், புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள், இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். தொழில் முன்னேற்றம் திருப்திகரமாக இருக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு திருமண வாய்ப்புகள் கைகூடும் நாள். உறவினர்கள் உங்களுடைய பணிக்கு உறுதுணையாக இருப்பார்கள், இடமாற்றம் செய்யலாம் என்று சிந்தனை தோன்றும் அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்

இன்று தங்களுடைய குடும்ப முன்னேற்றம் அதிகரிக்கும் நாள், குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்தாலும் கூட சில காரியங்களை செய்ய முடியாமல் போகலாம், உடன்பிறப்புகள் வழியே விரயம் ஏற்படும்.

மீனம்

இன்று தங்களுக்கு பங்குதாரர்களுடன் உண்டான பகை நீங்கும் நாள். தொலைதூர பயணம் செய்ய எடுத்த முயற்சி கைகூடும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள் உடல் நலம் சீராகும்.