இந்த ராசிக்காரர்களுக்கு இன்று பாக்கிகள் வசூலாகும்!

0
168

மேஷம்

இன்று உங்களுடைய தொழில் வளர்ச்சி கூடும் நாள், கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கைப் பிடிப்புடன் செயல்படுவீர்கள் மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தி தங்களுக்கு வழங்குவார்கள்.

ரிஷபம்

இன்று தாங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள், மனதில் தோன்றிய எண்ணங்களை செயலாக்க இன்னல்கள் உண்டாகலாம் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது கடினம். செலவுகளை தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மிதுனம்

இன்று தங்கள் இல்லம் தேடி இனிய செய்தி ஒன்று வந்து சேரும் நாள், வங்கி சேமிப்பு அதிகரிக்கலாம் தாங்கள் கண்ட கனவு பலிக்கும் ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை கையிலெடுப்பீர்கள் கொடுக்கல் வாங்கல்களில் ஒழுங்கு முறை ஏற்படும்.

கடகம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேறும் நாள், நேற்று சேர்த்து வைத்தது இன்றைய செலவுக்கு கைகொடுக்கும் தொழில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். மாற்று இனத்தவர்களால் மனதிற்கினிய செய்தி ஒன்று வந்து சேரும்.

சிம்மம்

இன்று தங்களுடைய பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள், பழைய பிரச்சினை ஒன்றை பக்குவமாக பேசி அதற்கான தீர்வு காண்பீர்கள் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தாயின் உடல் நலனில் கவனமுடன் இருப்பது நன்று.

கன்னி

இன்று தாங்கள் எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள், தபால் துறை மூலமாக சாதகமான செய்தி வந்து சேரும் கடன் சுமை குறையும். இடம், பூமி, வாங்கி சேர்க்கும் எண்ணம் மனதில் தோன்றும்.

துலாம்

இன்று தங்களுக்கு உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சியடையும் நாள், வரவு திருப்தியாக இருக்கும் கையில் எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். வரன்கள் வீடு தேடி வரும் விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள், புகழும், பாராட்டும், அதிகமாகும். அந்நிய தேசத்திலுள்ள நிறுவனங்களிலிருந்து பணிக்கான அழைப்புகள் வரலாம்.

தனுசு

இன்று தாங்கள் விழிப்புடன் செயல்பட்டால் விரயங்களை குறைக்கலாம், விருந்தினர்களின் வகையுண்டு வரவை விட செலவு அதிகரிக்கும் அண்டை வீட்டாரின் பகை அதிகமாவதற்கான வாய்ப்புண்டு.

மகரம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள், உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள், குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியடையும் நாள் தைரியத்துடன் எந்த காரியத்திலும் ஈடுபடுவது நன்று.

கும்பம்

இன்று தாங்கள் நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள், குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் தந்தை வழியில் தனலாபமு ண்டு மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவார்கள் பணியாளர் தொல்லை நீங்கும்.

மீனம்

இன்று தங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள், புதிய நண்பர்களுடைய அறிமுகம் கிடைக்கலாம். பழைய கடன்களை கொடுத்து மகிழ்ச்சியடையும் வாய்ப்பு ஏற்படும் நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்லதொரு முடிவுக்கு வரும்.

Previous articleசுடுநீரை குடிப்பவரா நீங்கள்:? இதனால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு சிறந்த பரிகாரத் தலம்!