இந்த ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டது தொலங்கும்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று பிரியமானவர்களின் சந்திப்பு காரணமாக, பிரச்சனைகள் தீரும் நாள், ஆரோக்கியம் சீராகும். பரிமாற்றத்திலிருந்த பிரச்சனைகள் நீங்கிவிடும் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று தாங்கள் விட்டுக் கொடுத்துச்செல்ல வேண்டிய நாள், செலவுகள் அதிகரிக்கும், அரசு வழிச் சலுகைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம், ஊர் மாற்றங்கள் செய்யும் எண்ணம் மேலோங்கும், உத்தியோக முயற்சி கைகூடும்.

மிதுனம்

கொடுத்த பணம் சரியான நேரத்திற்கு கைக்கு வந்து சேரும் நாள், குடும்பச்சுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும், அஞ்சல் வழி தகவல்கள் ஆச்சரியப்படும் விதமாக இருக்கும் தெய்வீக பயணம் உண்டு.

கடகம்

இன்று தங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும் நாள், பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், குடும்பத்தினர் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு வழங்குவார்கள்.

சிம்மம்

சண்டை சச்சரவுகளை சாமர்த்தியமாகப் பேசி சாதிப்பீர்கள், வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் ஏற்படும், மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும், உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள்.

கன்னி

இன்று தாங்கள் எந்த காரியத்தை கையில் எடுத்தாலும் அதில் உடனடி வெற்றி கிடைக்கும் நாள், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும், தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

துலாம்

பணிகளில் உண்டான பாதிப்புகள் நீங்கும் நாள், பணவரவு திருப்திகரமாக இருக்கும், ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும், விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி அதிகரிக்கும் நாள், வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தனுசு

தட்டுப்பாடுகள் நீங்க கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நாள், காரியத்தடைகள் அதிகரிக்கலாம். எதிர்பார்த்த பணவரவு வருவதில் தாமதம் உண்டாகும் உறவினர் பகை ஏற்படும்.

மகரம்

அசையா சொத்துக்கள் வாங்குவதற்காக எடுத்த முயற்சிகள் கைகூடும், வெளியுலகத் தொடர்பு விரிவடையும். சேமிப்புகளை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும், விலையுயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.

கும்பம்

உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பாக இனிப்பான தகவல் வந்து சேரும் நாள், பழைய வாகனத்தை கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மீனம்

தடைபட்ட காரியங்கள் யாவும் இன்று தானாக நடைபெறும் நாள், நம்பிக்கையும், தைரியமும், அதிகரிக்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.