இந்த ராசிக்காரர்கள் இன்று கவனமுடன் இருப்பது அவசியம்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும், பழகிய சில நபர்களுக்காக கணிசமான தொகையை செலவிட நேரலாம், வீடு மாற்றம், இடமாற்றம், செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.

ரிஷபம்

கொடுத்த வாக்கை செயலாக்கிக் காட்டும் நாள், துணிவும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடையும் வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் நன்மை உண்டு.

மிதுனம்

இன்று தங்களுடைய நட்பு வட்டாரம் விரிவடையும் நாள், பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும், அதிகரிக்கும் தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றியடையும், அரசு வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும், வரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் நாள், உற்றார், உறவினர்கள், உங்களுடைய முன்னேற்றத்தை கண்டு ஆச்சரியப்படுவார்கள். உடன் பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறும் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு திருமண முயற்சி கைகூடும் நாள், வரவு திருப்திகரமாக இருக்கும், சொத்துக்களால் லாபம் கிடைக்கும், தொழில் பங்குதாரர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள் வரவேண்டிய பணம் வந்து சேரும்.

கன்னி

இன்று தங்களுடைய கனவுகள் நனவாகும் நாள், நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்தித்து மார்கிஸ்ச்சியடைவீர்கள் ஆடை, ஆபரணப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம்

இன்று தங்களுடைய உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். திடீர் வரவு மகிழ்ச்சி கொடுக்கும், புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் அதிகரிக்கும்,, கடன் பாக்கிகளை நயமாகப் பேசி வசூல் செய்வீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய செல்வநிலை அதிகரிக்கும் நாள், நண்பர்களின் ஒத்துழைப்புடன் நல்ல காரியம் நடைபெறும், வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள், இடம் பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு சகோதர ஒற்றுமை அதிகரிக்கும் நாள், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள், எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும், நண்பர்கள் நல்ல தகவலை வழங்குவார்கள்.

மகரம்

இன்று தாங்கள் மற்றவர்களை விமர்சிப்பது தொடர்பாக பிரச்சினைகள் உண்டாகும் நாள், எடுத்த காரியத்தை முடிப்பதற்காக மிகப்பெரிய பிரயாசை எடுக்க நேரலாம், விலைமதிப்புள்ள பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.

கும்பம்

இன்று தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்ச்சியடைவீர்கள் , தேங்கிய காரியங்களை மிகத் துரிதமாக செய்து முடிப்பீர்கள், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும், சுபகாரியப் பேச்சுகள் முடிவாக லாம்.

மீனம்

இன்று தங்களுக்கு பயணங்களால் பலன் கிடைக்கும் நாள், உறவினர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை, உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது மிகவும் நன்று.