இன்று இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நடக்காமல் போகலாம்!

Photo of author

By Sakthi

மேஷம்

இன்று தங்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும் பொதுநலத்தில் ஆர்வம் அதிகரிக்கும், புதியவர்கள் நண்பர்களாக இணைவார்கள், தொழில் முன்னேற்றம் கைகூடும் பயணம் மூலமாக பலன் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு தடைகள் யாவும் தகர்த்து போகும் நாள் உடன்பிறப்புகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் நீண்ட நாளைய பிரச்சனையொன்று திடீரென்று நல்லதொரு முடிவிற்கு வரும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும் நாள், வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நிச்சயம் செய்த காரியம் ஒன்று நிச்சயத்தைபடியே நடந்த முடியும் வீடு மாற்றம், இடமாற்றம திருப்திகரமாக.

கடகம்

இன்று தங்களுக்கு குடும்பச்சுமை அதிகரிக்கும் நாள், பரிமாற்றம் லாபம் கொடுக்கும்,கொடுத்த வாக்கை சற்று தளர்த்திக் கொள்ள நேரலாம், சுபகாரியம் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள், நிலையான வருமானத்திற்கு வழிவகை செய்து கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் திருமண வாய்ப்புகள் கைகூடும், விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள்.

கன்னி

இன்று தங்களுக்கு பிரச்சனைகள் யாவும் படிப்படியாக முடிவுக்கு வரும் நாள், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்திணைவார்கள். வியாபாரம், தொழிலில், புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிவடையும்.

துலாம்

இன்று தங்களுக்கு துணிவும், தன்னம்பிக்கையும், அதிகரிக்கும் நாள், பணம் கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும், குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள்.

விருச்சிகம்

இன்று தங்களுடைய கனவுகள் யாவும் நனவாகும் நாள், காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி புரிவார்கள். அரசியல்வாதிகள் காரணமாக, ஆதாயம் கிடைக்கும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள், தொழில் வெற்றி நடைபோடும்.

தனுசு

இன்று தங்களுக்கான வாய்ப்புகள் வீடு தேடி வரும் நாள், செல்லும் இடங்களில் சிந்தனை வளம் காரணமாக, சிறப்படைவீர்கள். இதனால் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும் ஆடை, ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று தாங்கள் நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து கவலை கொள்ளும் நாள், குடும்ப பிரச்சனைகளில் யாரும் தலையிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நன்று, சிலர் பாராட்டுவதை போல உங்களை விமர்சனம் செய்யும் சூழ்நிலை உண்டாகலாம்.

கும்பம்

இன்று தங்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும் நாள், வாரிசுகளால் பெருமை சேரும், பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள், வீட்டை சீரமைக்கும் எண்ணம் அதிகரிக்கும், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு மனக்கலக்கம் உண்டாகும் நாள், எதிர்பார்த்த காரியம் நடைபெறாமல் போவதற்கான வாய்ப்புண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் எண்ணம் மேலோங்கும்.