இந்த ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் நிதானம் தேவை!

0
258

மேஷம்

இன்று தங்களுக்கு விடியற்காலையிலேயே விரயங்கள் உண்டாகும். எதிரிகளின் பலம் அதிகரிக்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது, பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் உண்டாகும், மனக்குழப்பம் அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு எதிர்பாராத வரவு கிடைக்கும் நாள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள், பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றலாம், திருமணதடை நீங்கும்.

மிதுனம்

இன்று தங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும் நாள், நண்பர்களின் ஒத்துழைப்பு காரணமாக, நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினரின் தேவை உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்வீர்கள், தொழில் வளர்ச்சியிலிருந்து வந்த தடை நீங்கும்.

கடகம்

இன்று தாங்கள் வாரிசு தொழில் வளர்ச்சியை கண்டு பெருமைப்படும் நாள், வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும், எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவீர்கள், மாலை நேரம் முன்னெடுக்கும் பயணம் மகிழ்ச்சி தரும் விதமாக இருக்கும்.

சிம்மம்

இன்று தங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும் நாள், தொழில் வெற்றி நடைபோடும், ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சனை நீங்கள் கடன் சுமை குறையும்.

கன்னி

இன்று தங்களது இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள், வியாபாரத்தில் ஏற்றமும், மாற்றமும், உண்டாகும். பரிமாற்றத்திலிருந்த சிக்கல்கள் நீங்கிவிடும், நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள் வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

துலாம்

இன்று தங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும், ஆரோக்கியம் சீராகும், சகோதர வழியில் மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும், தொழில் போட்டிகள் நீங்கும் உத்தியோகத்தில் தற்காலிக பணி நிரந்தர பணியாக மாறுவதற்கான வாய்ப்புண்டு.

விருச்சிகம்

தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும், வாகன மாற்றம் செய்வது தொடர்பாக சிந்திப்பீர்கள், நேற்றைய பிரச்சினை இன்று நல்லதொரு முடிவிற்கு வரும், உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

தனுசு

இன்று தங்களுக்கு மன குழப்பம் நீங்கும் நாள், கூட்டுத்தொழிலில் மாற்றம் உண்டாகும், பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். திட்டமிட்ட பயணத்தில் திடீர் மாற்றம் செய்வதற்கு நினைப்பீர்கள், வழக்குகள் சாதகமாக முடிவடையும்.

மகரம்

பெரிய மனிதர்களின் சந்திப்பு காரணமாக, பிரச்சனைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும், பயணத்தால் செலவு ஏற்படும் முன் பின் தெரியாதவர்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.

கும்பம்

இன்று தங்களுக்கு வளர்ச்சி கூடும் நாள், எதிர் வரும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள், தொழிலில் தொல்லை கொடுத்து வந்த நபர்கள் விலகிச்செல்வார்கள், இடமாற்றம் தொடர்பாக இனிய தகவல் வரும்.

மீனம்

இன்று தங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள், பொருளாதார நிலை அதிகரிக்கும், உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள், உறவினர்கள் வருகை தருவார்கள், உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.

Previous articleமுன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!
Next articleசபரிமலையில் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் இருக்கும் உண்மையான காரணம் இதுதான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here